தமிழ்நாடுமாவட்டம்

2024-25ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்!!

தமிழக பட்ஜெட் தாக்கல் நாளை நடைபெற இருக்கும் நிலையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதற்கு முன்பாகவே தமிழக அரசு சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. அந்த வகையில், கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, நாளை 2024-25 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் நடைபெற இருக்கிறது.

நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு முதன்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய இருப்பதால் ஏகப்பட்ட திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் வெளியாகும் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அதாவது, தற்போது தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் நிலையில் இந்த உரிமை தொகையை ரூ. 1500 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாகலாம் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− two = one

Back to top button
error: