தமிழ்நாடுமாவட்டம்

தமிழகத்தில் 11 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்!!

தமிழக அரசின் ஒவ்வொரு துறைகளுக்குமான ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அரசின் நிர்வாகம் தொடர்பான காரணங்களுக்காக அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். ஜனவரி 27 ஆம் தேதியன்று தமிழகத்தின் 11 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் முதன்மை செயலாளர் அமுதா ஐஏஎஸ் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகளின் விவரங்கள் பின்வருமாறு:

  • திருப்பூர் எஸ்.பி சாமிநாதன், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • திருவள்ளூர் எஸ்.பி பாகெர்லா கல்யாண், சென்னை தென்மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • சென்னையில் கட்டாய காத்திருப்பு பட்டியலிலிருந்த சீனிவாசபெருமாள் திருவள்ளூர் எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • திருப்பூர் நகரச் சட்டம் ஒழுங்கு துணை ஆணையராகக் கோவை துணை ஆணையர் எம்.ராஜராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • மதுரை துணை ஆணையராக இருந்த அனிதா நெல்லை துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • திருப்பூர் துணை ஆணையராக இருந்த அபிஷேக் குப்தா, திருப்பூர் எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • சென்னை கொளத்தூர் துணை ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி பாண்டியராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • சென்னை வடக்கு சரக லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்பியாக வி.சரவணகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • மத்திய புலனாய்வு பிரிவு எஸ்பியாக வி.ஷியாமாலா தேவி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • சென்னை தெற்கு சரக லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்பியாக சாமிநாதன் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • சென்னை சிஐடி எஸ்பியாக எஸ்.சக்திவேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty five + = twenty seven

Back to top button
error: