தமிழ்நாடுமாவட்டம்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு: இந்த தேதியில் நுழைவுச்சீட்டு வெளியீடு..!

தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வருகிற மார்ச் 26ம் தேதி முதல் ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் மாணவர்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு மார்ச் 15ம் தேதி பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமில்லாமல் பொதுதேர்விற்கான பெயர் பட்டியலில் பள்ளி மாணவ மாணவிகளின் பெயர், பிறந்த தேதி, மொழி ஆகிய திருத்தங்கள் எதுவும் இருந்தால், சம்மந்தப்பட்ட தேர்வு மைய கண்காணிப்பாளர்களை அணுகி தேர்வு மையத்திற்கான பெயர் பட்டியலில் உரிய திருத்தங்கள் செய்யலாம் என பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + one =

Back to top button
error: