
ஐபிஎல் 2025 சீசனின் ஒரு பகுதியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி (RCB vs GT) இன்று புதன்கிழமை நடைபெறுகிறது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில், டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்யத் தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. லிவிங் ஸ்டோன் 54, ஜிதேஷ் சர்மா 33, டேவிட் 32 ரன்கள் எடுத்தனர்.
குஜராத் பந்து வீச்சாளர்களில் சிராஜ் 3 விக்கெட்டுகளையும், சாய் கிஷோர் 2, அர்ஷத், இஷாந்த் மற்றும் பிரசித் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்த இன்னிங்ஸில் 170 ரன்கள் என்ற இலக்கை அடையும் முனைப்பில் உள்ளது.