IPL 2025: இந்த தேதியில் ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கும்.. வெளியான முக்கிய அறிவிப்பு!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 18 வது சீசன் விறுவிறுப்பாகவும், கடைசி ஓவர் வரை, வெற்றி யார் பக்கம் இருக்கும் என்று எதிர்பார்ப்புடன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் கடந்த வாரம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டதால் IPL தொடரை ஒரு வாரத்திற்கு ஒத்திவைப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பிசிசிஐ நிர்வாகம் அறிவித்திருந்தது.
தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த IPL தொடர் மீண்டும் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் உள்ளது. தற்போது இது தொடர்பாக ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, நிறுத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் வரும் மே 17 அல்லது 18ம் தேதி தொடங்கலாம் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.