வேலைவாய்ப்பு

மாதம் ரூ.43 ஆயிரம் சம்பளத்தில் தேர்வில்லாமல் கால்நடை மருத்துவ ஆலோசகர் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் காலியாக உள்ள கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 3 காலியிடங்கள் உள்ளன. எனவே, விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 08.03.2024 அன்று நடக்கும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

காலியிடங்கள்:

வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க லிமிடெட் நிறுவனத்தில் கால்நடை பராமரிப்பு ஆலோசகர் பணிக்கு 3 காலியிடங்கள் உள்ளன.

தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து B.V.Sc.,& AH முடித்திருக்க வேண்டும். இத்துடன் கணினி பயன்பாடு பற்றிய விவரங்கள் தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமத்துடன் இரு சக்கர வாகனம் வைத்திருக்க வேண்டும்.

சம்பளம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபருக்கு மாதம் ரூ.43,000/- வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 08.03.2024 அன்று காலை 11:00 மணிக்கு வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க லிமிடெட், வேலூர்-9-ல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

IMG 20240307 114352

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி, அசல் சான்றிதழ்கள், விண்ணப்பம் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − = ten

Back to top button
error: