Skip to content
Daily Tamilnadu
செவ்வாய், 13 அக்டோபர் 2026
BREAKING
டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு: உலகத் தலைவர்களை வரவேற்க தயார் இந்தியா! • தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! • டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! • யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! • இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! • டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு: உலகத் தலைவர்களை வரவேற்க தயார் இந்தியா! • தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! • டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! • யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! • இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்!

பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட போக விடமாட்டோம்: மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல்..!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்திய அரசாங்கம் ஏற்கனவே பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இது தொடர்பாக, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல், இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட பாய அனுமதிக்கப்படாது என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

பயங்கரவாதத் தாக்குதலால் ஏற்பட்ட நிலைமை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் வெள்ளிக்கிழமை உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர் பாட்டீல் பின்னர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக பிரதமர் மோடி பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக அவர் கூறினார். அவற்றை திறம்பட செயல்படுத்துவதாக அவர் கூறினர்.

குறிப்பாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் எதிர்கால நடவடிக்கை குறித்து இந்த கூட்டம் விவாதித்ததாக தெரியவந்தது. பயங்கரவாத தாக்குதல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று பாகிஸ்தானுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முடிவு வரலாற்றுச் சிறப்புமிக்கது மற்றும் நியாயமானது என்று மத்திய அமைச்சர் கூறினார்.

How do you react to this story?

Share:
Daily Tamilnadu on Google News

கூகுள் செய்திகளில் எங்களை முதன்மை தளமாகச் சேர்ப்பதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெறலாம்.

Add as Preferred Source

0 Comments

Leave a Reply

whwqVS