
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற புனித யாத்திரைத் தலமான பத்ரிநாத்தில் இன்று பெரும் பனிச்சரிவு ஏற்பட்டது.
இந்த பெரும் பனிச்சரிவில் 55க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பனியில் சிக்கிக் கொண்டனர். தொழிலாளர்கள் சாலையில் வேலை செய்து கொண்டிருந்தபோது, திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது. இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தற்போது நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.