பீகாரில் பலத்த காற்று, ஆலங்கட்டி மழை.. மின்னல் தாக்கி 13 பேர் பலி..!
பீகாரின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்று மற்றும் ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. மின்னல் தாக்கத்தால் மாநிலத்தின் நான்கு மாவட்டங்களில் 13 பேர் உயிரிழந்தனர்.
மேலும், பெகுசராய் மற்றும் தர்பங்கா மாவட்டங்களில் நடந்த தனித்தனி சம்பவங்களில் 9 பேர் உயிரிழந்தனர். மதுபனியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். சமஸ்திபூரில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.
மின்னல் தாக்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் நிதீஷ் குமார், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்தார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கனமழையைத் தொடர்ந்து பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்ட அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Posted in: இந்தியா