ஆரோக்கியம்

காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் விளைவுகள்!!

நம் வாழ்வின் தரத்தை மேம்படுத்துவதில், சீரான ஆரோக்கியத்தின் பங்கு அளப்பரியது. சீரான ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான ஒரு அம்சம் சரிவிகித உணவுமுறை ஆகும். அதில், நம் நாளைத் தொடங்குவதற்கான ஆற்றலையும் ஊட்டத்தையும் வழங்கும் காலை உணவு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தக் பதிவில், காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் விளைவுகள் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

காலை உணவை தவிர்ப்பதன் தீய விளைவுகள்

சோர்வு மற்றும் குறைந்த கவனம்:

காலை உணவைத் தவிர்ப்பது குருதியில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கிறது. இது இன்றியமையாத ஆற்றல் மூலமாக செயல்படும் மூளைக்குத் தேவையான குளுக்கோஸின் அளவையும் பாதிக்கிறது. இதனால், நாள் முழுவதும் சோர்வு, மந்தநிலை, மற்றும் கவனம் செலுத்துவதில் சிக்கல் ஏற்படலாம்.

அதிகரிக்கும் பசி உணர்வு:

காலை உணவைத் தவிர்க்கும்போது, நீண்ட நேர உண்ணாவிரதத்திற்குப் பிறகு, அடுத்த வேளை உணவின்போது நமது பசி உணர்வு அதிகரிக்கிறது. இது கட்டுப்பாடற்ற உணவு உட்கொள்ளலுக்கு வழிவகுத்து, தேவையற்ற கலோரிகள் சேர்வதற்கும் உடல் எடை அதிகரிப்புக்கும் காரணமாகிறது.

மெட்டபாலிசம் பாதிப்பு:

காலை உணவு உடலின் வளர்சிதை மாற்றத்தை (மெட்டபாலிசம்) துவங்கி வைக்கிறது. பல மணிநேர இரவு உறக்கத்திற்குப் பிறகு, மெட்டபாலிசம் மந்தமாக இருக்கும். காலை உணவு அதை சீர்படுத்தி, உடல் செயல்பாடுகளைத் திறம்பட செய்யத் தயார்ப்படுத்துகிறது. காலை உணவைத் தவிர்க்கும் போது மெட்டபாலிச விகிதம் குறைகிறது.

நாட்பட்ட நோய்களுக்கான ஆபத்து:

நீண்ட காலத்திற்கு காலை உணவைத் தவிர்ப்பது இதய நோய், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் (“சர்க்கரை வியாதி”) போன்ற நாட்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கலாம் என ஆய்வுகள் காட்டுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ninety five − = 87

Back to top button
error: