ஆரோக்கியம்

புதினா தண்ணீர் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்!

கோடை கால வெயிலை சமாளிப்பதற்கு புதினா தண்ணீர் எப்படி உதவியாக இருக்கின்றது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

கோடை காலம் வந்துவிட்டாலே வெயிலின் தாக்கம் அதிகரித்து விடுகின்றது. இதனால் மக்கள் கடும் அவதியில் சிக்கிக் கொள்கின்றனர். தற்போது வெயில் என்பது அளவுக்கு அதிகமான இருந்து வரும் நிலையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க சில வழிமுறைகளை இங்கு தெரிந்து கொண்டு அதனை கடைபிடித்தால், நிச்சயம் வெயிலிலிருந்து தப்பிக்கலாம். அதிகமான பானத்தை பருகி வரும் நிலையில், புதினா தண்ணீரையும் பருகி வந்தால் சற்று நன்மையை காணலாம்.

உடல் எடையைக் குறைக்க விரும்புவர்கள் செரிமான பிரச்சினை இருந்தால் சிரமத்தை சந்திக்க நேரிடும். செரிமான பிரச்சினை இருந்தால், வயிறு உப்புசம், வாயு பிரச்சினை காணப்படும். இதற்கு சிறந்த தீர்வாக புதினா தண்ணீர் இருக்கின்றது.

அதிகமாக பசி எடுத்து சாப்பிடும் நபர்கள் புதினா தண்ணீரை பருகலாம். ஏனெனில் இவை பசியை அடக்குவதுடன், உணவின் மீதான ஆசையையும் குறைக்கின்றது.

உடல் எடையைக் குறைக்க உடம்பில் நீர்ச்சத்து அவசியமாகும். புதினா தண்ணீர் தாகத்தை மட்டும் தீர்க்காமல் உடம்பில் நீர்ச்சத்து குறையாமலும் பார்த்துக் கொள்கின்றது. மெட்டாபாலிசத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், கொழுப்பை உடைக்கவும் நீர்ச்சத்து அவசியமாகும்.

உடம்பில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற புதினா தண்ணீர் நன்கு பயன்படுகின்றது. இவை இயற்கையான நச்சு நீக்கியாக இருப்பதுடன், உடல் எடையையும் குறைத்து உடம்பினை குளிர்ச்சியாக வைத்துக் கொள்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

60 − fifty six =

Back to top button
error: