இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று ஓரளவு ஏற்றத்துடன் நிறைவடைந்தன. சர்வதேச சந்தைகளின் கலவையான சிக்னல்களுக்கு மத்தியில் இன்று காலை சந்தைகள் சீராக திறக்கப்பட்டன. இருப்பினும், கார் மற்றும் ஐடி நிறுவனங்களின் பங்குகளின் ஆதரவுடன் சந்தைகள் இறுதியாக லாபத்தில் முடிவடைந்தன.
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 115 புள்ளிகள் அதிகரித்து 76,520 புள்ளிகளாக உள்ளது. நிஃப்டி 50 புள்ளிகள் உயர்ந்து 23,205 புள்ளிகளில் நிலைத்தது.
பிஎஸ்இ சென்செக்ஸ்
அதிக லாபம் ஈட்டியவர்கள்:
அல்ட்ராடெக் சிமெண்ட் (6.81%), ஜொமாட்டோ (2.52%), மஹிந்திரா மற்றும் மஹிந்திரா (2.03%), சன் பார்மா (2.01%), டெக் மஹிந்திரா (1.86%).
அதிகம் நஷ்டம் அடைந்தவர்கள்:
பவர் கிரிட் கார்ப்பரேஷன் (-1.19%), கோடக் மஹிந்திரா வங்கி (-1.18%), ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் (-1.06%), ரிலையன்ஸ் (-1.05%), ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (-0.97%).
டிசம்பரில் ஜிஎஸ்டி மூலம் ரூ.1.77 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு டிசம்பர் மாத வசூலை விட 7.3% அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய ஜிஎஸ்டி ரூ.32,836 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி ரூ.40,499 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஐஜிஎஸ்டி ரூ.47,783 கோடியாகவும், செஸ் ரூ.11,471 கோடியாகவும் உள்ளது. பண்டிகை கால விற்பனை அதிகரித்ததன் காரணமாக ஜிஎஸ்டி வசூல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டில் UPI பரிவர்த்தனைகளில் ஒரு முக்கிய மைல்கல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்த ஆண்டு நடந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளை எக்ஸ் சமூக வலைதளத்தில் மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் இறுதி வரை ரூ.15,547 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாகவும், ரூ.223 லட்சம் கோடி பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பொருளாதாரம் டிஜிட்டல் பரிவர்த்தனை புரட்சியை நோக்கி நகர்வதாகக் கூறப்படுகிறது.
Driving the #DigitalPayment revolution, UPI achieved 15,547 crore transactions worth Rs. 223 lakh crore from January to November, 2024, showcasing its transformative impact on financial transactions in India.
⁰#FinMinYearReview2024⁰#BankingInitiatives⁰#ViksitBharat pic.twitter.com/Bkbag6542k— Ministry of Finance (@FinMinIndia) December 14, 2024
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைக்கின்றன. இந்நிலையில், டிசம்பர் மாதம் தொடங்கியுள்ள நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் இன்று எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தியுள்ளன.
உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் அதிகம் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வணிக ரக எல்பிஜி எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.16.5 உயர்த்தப்பட்டுள்ளது. 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
அந்த வகையில் சென்னையில் வணிக பயன்பாட்டு 19 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டர் விலை ரூ.16.5 உயர்ந்து ரூ.1,980.50-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் ரூ.61.50 விலை அதிகரித்து இருந்த நிலையில், இந்த மாதமும் விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வார இறுதியில் இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்தன.
இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 759 புள்ளிகள் உயர்ந்து 79,802 புள்ளிகளில் நிறைவடைந்தது. நிஃப்டி 216 புள்ளிகள் உயர்ந்து 24,131 புள்ளிகளில் நிலைத்தது.
பிஎஸ்இ சென்செக்ஸ்
அதிக லாபம் அடைந்தவர்கள்:
பார்தி ஏர்டெல் (4.30%), சன் பார்மா (2.68%), மஹிந்திரா மற்றும் மஹிந்திரா (2.38%), அதானி போர்ட்ஸ் (1.94%), அல்ட்ராடெக் சிமெண்ட் (1.78%).
அதிக நஷ்டம் அடைந்தவர்கள்:
பவர் கிரிட் கார்ப்பரேஷன் (-1.23%), நெஸ்லே இந்தியா (-0.07%), ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (-0.05%).
இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடும் நஷ்டத்தில் முடிவடைந்தன. அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பின் கொள்கைகள் மீதான நிச்சயமற்ற தன்மை, அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு ஆகியவை பங்குச்சந்தையில் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அதுமட்டுமின்றி ஐடி பங்குகளின் விற்பனை அழுத்தமும் சந்தைகளை பாதித்தது.
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 1,190 புள்ளிகள் சரிந்து 79,043 புள்ளிகளில் நிறைவடைந்தது. நிஃப்டி 360 புள்ளிகள் இழந்து 23,914 புள்ளிகளில் நிலைத்தது.
இன்ஃபோசிஸ் (-3.46%), மஹிந்திரா மற்றும் மஹிந்திரா (-3.36%), பஜாஜ் ஃபைனான்ஸ் (-2.84%), அதானி போர்ட்ஸ் (-2.73%), ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் ஆகியவை பிஎஸ்இ சென்செக்ஸில் அதிக நஷ்டம் அடைந்தன.
இந்திய பங்குச் சந்தைகள் இன்று (புதன்கிழமை) ஏற்றத்துடன் முடிவடைந்தன. குறிப்பாக அதானி பங்குகள் இன்று சிறப்பாக செயல்பட்டன. அதானி குழும நிறுவனங்கள் மீதான லஞ்ச குற்றச்சாட்டுகளை அடுத்தும் அதானி குழுமத்தின் பங்குகள் லாபம் ஈட்டியது. அதானி பவர் மற்றும் அதானி டோட்டல் கேஸ் பங்குகள் தலா 20 சதவீதம் அதிகரித்தது. அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் 10 சதவீதம் வரை அதிகரித்தது.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் காலையில் 80,121.47 புள்ளிகளில் ஏற்றத்துடன் துவங்கி சிறிது நேரத்தில் ஏற்ற இறக்கங்களை சந்தித்தது. இறுதியாக 230 புள்ளிகள் அதிகரித்து 80,234.06 இல் நிலைபெற்றது. மறுபுறம், நிஃப்டி 80 புள்ளிகள் உயர்ந்து 24,274.90 ஆக முடிந்தது. உலக சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் பேரல் விலை 72.33 டாலராக வர்த்தகமாகி வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 84.44ஐ எட்டியது.
லாபத்தில் முடிந்த பங்குகள்: அதானி போர்ட்ஸ், என்டிபிசி, ஹெச்டிஎஃப்சி வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், மாருதி சுசுகி
நஷ்டத்தில் முடிந்த பங்குகள்: ஏசியன் பெயிண்ட்ஸ், சன் பார்மா, இண்டஸ் இண்ட் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, டைட்டன்
இந்திய பங்குச்சந்தைகள் இன்று நஷ்டத்தில் முடிந்தன. இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 105 புள்ளிகள் சரிந்து 80,004 புள்ளிகளில் நிறைவடைந்தது. நிஃப்டி 27 புள்ளிகள் இழந்து 24,194 புள்ளிகளில் நிலைத்தது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 84.33 ஆக உள்ளது.
பிஎஸ்இ சென்செக்ஸ்
அதிக லாபம் அடைந்தவர்கள்:
ஏசியன் பெயிண்ட்ஸ் (1.79%), இன்ஃபோசிஸ் (1.73%), ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் (1.11%), டிசிஎஸ் (0.85%), ரிலையன்ஸ் (0.60%).
அதிக நஷ்டம் அடைந்தவர்கள்:
அதானி போர்ட்ஸ் (-3.23%), அல்ட்ராடெக் சிமெண்ட் (-3.07%), சன் பார்மா (-2.48%), என்டிபிசி (-1.90%), மஹிந்திரா மற்றும் மஹிந்திரா (-1.87%).
சீனாவின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி, அதன் துணை பிராண்டான ரெட்மி புதிய மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது.
Redmi A4 5G என்ற இந்த புதிய போன் இந்திய சந்தையில் வெளியிடப்பட்டுள்ளது. 4ஜிபி+64ஜிபி வகையின் விலை ரூ. 8,999, 4ஜிபி+128ஜிபி மாறுபாட்டின் விலை ரூ. 9,499 என நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்த போன் கருப்பு மற்றும் ஊதா நிறங்களில் கிடைக்கிறது. இந்த போனின் முதல் விற்பனை நவம்பர் 27ம் தேதி தொடங்கும். இந்த போன் Amazon மற்றும் Mi இணையதளங்களில் வாங்குவதற்கு கிடைக்கும்.
Redmi A4 5G அம்சங்கள்:-
முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா தனது அனைத்து வாகனங்களின் விலையையும் உயர்த்த முடிவு செய்துள்ளது. அதிகாரப்பூர்வ அறிக்கையில், அனைத்து மாடல்களிலும் 3 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், திருத்தப்பட்ட விலைகள் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதிகரித்த உள்ளீட்டுச் செலவுகள், பணவீக்க அழுத்தங்கள் மற்றும் அதிகரித்த இயக்கச் செலவுகள் காரணமாக பென்ஸ் சில சுமையை நுகர்வோருக்கு மாற்றியுள்ளது. இதன் மூலம் பென்ஸ் கார்களின் விலை குறைந்தது ரூ. 2 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ. 9 லட்சம் வரை அதிகரிக்கும்.
மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் சந்தோஷ் ஐயர் கூறுகையில், கடந்த மூன்று காலாண்டுகளாக நிறுவனத்தின் இயக்கச் செலவுச் சுமையைத் தாங்கி வருவதாகவும், இதனை சமாளிக்கும் வகையில் விலையை உயர்த்தி வருவதாகவும் தெரிவித்தார். டிசம்பர் 31 க்கு முன் முன்பதிவு செய்பவர்களுக்கு இந்த உயர்வு பொருந்தாது என்று நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.