புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை..!
சென்னை, அக்டோபர் 17: தங்கம் விலை இன்று மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டு வரும் நிலையில், இன்று (அக்.17) தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
அதன்படி, சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ரூ.12,200 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து ரூ.97,600 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கு மாறாக, வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.3 குறைந்து ரூ.203 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,03,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.