Author: newsdesk

பெங்களூருவில் ஆண் நண்பர்களை வாடகைக்கு எடுக்கும் Toyboy எனப்படும் portal திறக்கப்பட்டுள்ளது, பெண்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தளத்தின் மூலம் ஆண் நண்பர்களை பெண்கள் வாடகைக்கு எடுத்துக்கொள்ள முடியும். காதலனால் ஏமாற்றப்பட்டு தனிமையில் மன அழுத்தத்தில் இருக்கும் பெண்கள், பேசுவதற்கு ஆண் நண்பர்கள் தேவை என்றால் இந்த போர்ட்டல் மூலம் புக் செய்து கொள்ளலாம். இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு Toyboy போர்ட்டலுக்கான ஏபிகே பைலை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது பெங்களூருவில் டிரண்டாகி வருகிறது.

Read More

இந்திய பங்குச்சந்தைகள் இன்று சரிவுடன் தொடங்கின. சென்செக்‍ஸ் 600 புள்ளிகளுக்‍கு மேல் வீழ்ச்சியடைந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, 609 புள்ளிகள் சரிந்து 56 ஆயிரத்து 499 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, 182 புள்ளிகள் குறைந்து 16 ஆயிரத்து 825 புள்ளிகளாகவும் இருந்தன.

Read More

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்‍கை தொடர்ந்து 2-வது நாளாக 4 ஆயிரத்துக்‍கு கீழ் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 615 பேருக்‍கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 4 கோடியே 45 லட்சத்து 79 ஆயிரத்து 88-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 22 பேர் வைரஸ் தொற்றுக்‍கு மரணமடைந்துள்ளதாகவும், இதன் மூலம் கொரோனா மொத்த பலி எண்ணிக்‍கை 5 லட்சத்து 28 ஆயிரத்து 584-ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. 44 ஆயிரத்து 436 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவுக்‍கு சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை 4 கோடியே 40 லட்சத்து 9 ஆயிரத்து 525 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாகவும், நேற்று ஒரேநாளில் 4 ஆயிரத்து 972 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளதாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இன்று காலை…

Read More

வெந்தய கீரை கூட்டு, மிகவும் சத்தான, சுவையான கூட்டு. சூடான சாதத்தில், கூட்டை ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும். தேவையான பொருட்கள்: வெந்தய கீரை – 2 கப் (கப்பில் அழுத்தி அளக்கவும்) பயற்றம் (பாசி) பருப்பு – 3 மேஜைக்கரண்டி தேங்காய் – 1/2 கப் சாம்பார் தூள் – 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி உப்பு – தேவைக்கேற்ப சக்கரை – 1/4 தேக்கரண்டி அரிசி மாவு – 1/4 தேக்கரண்டி தாளிக்க: எண்ணெய் – 2 தேக்கரண்டி கடுகு – 1/2 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி ஜீரகம் – 1 தேக்கரண்டி சின்ன வெங்காயம் – 4 செய்முறை விளக்கம்: பாசி பருப்பை (பயற்றம் பருப்பு) 1/2 கப் தண்ணீர் சேர்த்து, 2 விசில் மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும்.…

Read More

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) சமீபத்தில் நாடு முழுவதும் உள்ள பிஎஃப்ஐ அலுவலகங்களில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்ததாகவும், இளைஞர்களுக்கு பயங்கரவாதத்தில் பயிற்சி அளிப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த அமைப்பைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், பிஎஃப்ஐ மற்றும் அதனுடன் இணைந்த 8 அமைப்புகளுக்கு 5 ஆண்டுகளுக்கு தடை விதித்து சமீபத்தில் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இவை உடனடியாக அமலுக்கு வரும் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், சமீபத்தில் பாட்னாவில் பிரதமர் மோடியை கொல்ல PFI சதி செய்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

Read More

நீண்ட நாட்களுக்கு பிறகு பொதுநிகழ்ச்சியில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தோன்றி, தன்னைப்பற்றிய வீட்டுக் காவல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருப்பதாக கடந்த சில நாட்களாக வதந்திகள் பரவின. சீனாவில் என்ன நடக்கிறது என்று தெளிவாக தெரியவராத நிலையில், அங்கு ஆட்சி கவிழ்ப்பு முயற்சி நடப்பதாகவும் சில சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. இந்த நிலையில் பீஜிங்கில் நடைபெற்ற கண்காட்சியை ஜின்பிங் பார்வையிட்ட காட்சியை அந்நாட்டு அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. கடந்த 16 ஆம்தேதி உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் பங்கேற்ற பிறகு முதல் முறையாக பொதுநிகழ்ச்சியில் ஜின்பிங் கலந்து கொண்டார்.

Read More

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருமலை – திருப்பதி இடையே மின்சார பேருந்து போக்குவரத்து சேவையை ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி துவக்கி வைத்தார். முதல் கட்டமாக 10 மின்சார பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், 100 பேருந்தகள் வரை இயக்க ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது. இந்த பேருந்தில் பயணிக்க இரு வழி பாதை கட்டணமாக 200ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஆனால் சாதாரண பேருந்துகளில் இதற்கான கட்டணம் 180 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டி20 போட்டிக்கு எல்லாம் தயாராகிவிட்டது. ஐதராபாத்தில் உள்ள உப்பல் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த தொடரில் இந்தியா, ஆஸி., அணிகள் தலா 1-1 என சமநிலையில் உள்ளன. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும். இந்தப் பின்னணியில், உப்பல் மைதானத்தில் ஒரு மோதல் தவிர்க்க முடியாததாகத் தெரிகிறது. டாஸ் போட்டி குறித்து பேசிய ரோஹித் சர்மா, ஐதராபாத்தில் மக்கள் முன்னிலையில் விளையாடுவது மிகவும் உற்சாகமாக உள்ளது என்றார். நாக்பூரில் நடந்த வெற்றிகரமான கோல்கள் அணிக்கு உத்வேகம் அளித்துள்ளதாகவும், அதே போக்கை இங்கும் தொடரும் என்றும் அவர் கூறினார். கடந்த போட்டியில் விளையாடாத புவனேஷ்வர் குமார் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதாகவும், இந்த போட்டியில் ரிஷப் பந்த் விளையாட மாட்டார் எனவும் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். அப்போது பதிலளித்த ஆஸி., கேப்டன் ஆரோன் பின்ச், டாஸ் வென்றால்,…

Read More

பள்ளிக் கல்வித்துறையின் அலுவலகங்களில் பணி புரியும் மாவட்ட கல்வி அலுவலர்களின் உதவியாளர்கள், கண்காணிப்பாளர்கள், இளநிலை உதவியாளர்கள் உள்ளிட்டோர், 1.6.2022 அன்றைய நிலவரப்படி, மூன்று ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரிந்து இருந்தால், அவர்கள் உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கலந்தாய்வு நடத்தி அனைவரும் பணியிட மாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கலந்தாய்வானது வரும் 27-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறும் எனவும் பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

தமிழ்நாட்டில் கோவை, சேலம், மதுரை, ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்பட பல மாவட்டங்களில் பாஜக மற்றும் இந்து மத அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த சம்பவங்களால் மாநிலத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க், வன்முறை சம்பவத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பெட்ரோல் பங்குகளில் கேன்களில் பெட்ரோல் வழங்க கூடாது என வலியுறுத்தினார். இந்த நிலையில் ராமநாதபுரத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் பெட்ரோலை பாட்டில்களில் வழங்க மாவட்ட காவல்துறை தடைவித்து உத்தரவிட்டுள்ளது.

Read More