ஆரோக்கியம்

குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுகள்

எல்லாக் குழந்தைகளுக்கும் எல்லா உணவுகளும் ஒத்துப்போவதில்லை. சில குழந்தைகளுக்கு சில உணவுகளால் அலர்ஜி ஏற்படுகிறது. இதை ‘ஒவ்வாமை’ என்று சொல்கின்றனர். இந்த ஒவ்வாமையால் பல உபாதைகள் ஏற்படுகின்றன. இந்த அலர்ஜி பிரச்சனையை எப்படித் தவிர்க்கலாம் என்று பார்க்கலாம்.

பாலில் உள்ள ‘லாக்டோஸ்’ என்ற சத்து சில குழந்தைகளுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். பால் கொடுத்தால், அது குழந்தைக்கு செரிமானமாகாமல் வயிற்றுப்போக்கு ஏற்படும். பாலுக்குப் பதிலாக பால் பவுடர், பிற உணவுகளைத் தரலாம். ஆறு மாதத்துக்குப் பிறகு குழந்தைக்கு திட உணவு தர வேண்டும். சில குழந்தைகளுக்கு சில திட உணவுகள் ஒத்துக்கொள்ளாது. 5% குழந்தைகளுக்கு இப்படி அலர்ஜி ஏற்பட வாய்ப்புண்டு.

எந்த உணவுகள் அலர்ஜியை ஏற்படுத்தும்?

நிலக்கடலை

சோயாபீன்ஸ்

கடுகு

சில கொட்டை வகைகள்

பால்

மீன்

முட்டை

சில தானிய வகைகள் – கோதுமை போன்றவை

எலுமிச்சை

மேற்சொன்ன உணவுகளில் உள்ள புரதமோ மற்ற பொருட்களோ அலர்ஜிக்கு காரணமாகலாம்.

அலர்ஜி வரும் அறிகுறிகள் என்ன?

வயிற்றுப்போக்கு

வாந்தி

வயிற்று வலி

மூச்சுத்திணறல்

மயக்கம்

தொண்டைப் பகுதியில் வீக்கம்

மூக்கிலிருந்து நீர் வழிதல்

தோல் சிவந்து போதல், தடிப்பு, அரிப்பு

நாக்கு, உதடு, தொண்டைப் பகுதியில் எரிச்சல் ஏற்படுதல்

உடலெங்கும் குத்தும் உணர்வு

தலைச்சுற்றல்

தடுக்கும் முறைகள்

மருத்துவரிடம் குழந்தையைக் காண்பித்து முறையான பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும்.

மருத்துவர் கூறும் ஆலோசனைகளை சரியாக பின்பற்றுதல் வேண்டும். தடுப்பு மருந்துகள், அலர்ஜி மருந்துகள் ஆகியன மருத்துவர் பரிந்துரைத்தால் அதை அவசியம் சாப்பிட வேண்டும்.

6 மாதத்துக்கு மேல் திட உணவை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தினால் 3-நாள் விதிமுறையைப் பின்பற்றுதல் நல்லது.

ஒரு உணவை சிறிதளவு குழந்தைக்கு அறிமுகப்படுத்தி, குழந்தை அதை உண்ட பிறகு 3 நாள் வரை குழந்தையை நன்றாக கவனியுங்கள். அலர்ஜி ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் அழைத்து செல்லலாம். அலர்ஜி ஏற்படாமல் இருந்தால், அந்த குழந்தைக்கு அந்த உணவு ஒத்துக்கொள்கிறது என அர்த்தம்.

அலர்ஜி ஏற்படுத்தும் உணவுகளை எக்காலத்துக்கு எக்காரணத்துக்கும் குழந்தைகளுக்கு திரும்ப தர கூடாது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Back to top button
error: