Skip to content
Daily Tamilnadu
புதன், 9 செப்டம்பர் 2026
BREAKING
தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! வருமான வரிக் கணக்குத் தாக்கல்: ஜூலை 31 காலக்கெடு – தவறினால் ரூ.5,000 வரை அபராதம்! தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! வருமான வரிக் கணக்குத் தாக்கல்: ஜூலை 31 காலக்கெடு – தவறினால் ரூ.5,000 வரை அபராதம்!
Advertisement

செல்வவளம் தரும் ஸ்ரீ மஹாலக்ஷ்மி மந்திரப் பிரயோகம்!

ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று பூஜை அறையை மெழுகிச் சுத்தம் செய்து கொள்ளவும். மாம்பலகை, வாழை இலை அல்லது செந்தாமரை இலை போட்டு அதில் மஞ்சளால் ஒரு வட்டம் வரைந்து அதற்குள் கொஞ்சம் பச்சரிசி போட்டு பரப்பவும். ஒரு அகல் விளக்கு அல்லது வெள்ளி விளக்கில் நல்லெண்ணெய் மற்றும் பசுநெய்யைக் கலந்து ஊற்றி மஞ்சள்துணியைப் பன்னீரில் நனைத்துக் காயவைத்துத் திரியாக்கி அதனைக் கொண்டு விளக்கேற்றவும். அதிகாலையிலும், மாலை நேரத்திலும் விளக்கு ஏற்றி அந்த விளக்கை வலது கையிலும், ஊதுபத்தி ஏற்றி அதை இடது கையிலும் பிடித்துக் கொண்டு வாசல் வரை எடுத்துச் சென்று “ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்மி தேவி வந்து எனது இல்லத்தில் குடியிருந்து அஷ்ட ஐஸ்வர்யம் நிறைந்த வாழ்வு தந்தருள வேண்டும் ” என வேண்டிப் பின்னோக்கி நடந்து சென்று அந்த விளக்கைப் பூஜை அறையில் மஞ்சள் வட்டத்தின் நடுவே பரப்பிய பச்சரிசி மீது கிழக்கு முகமாக வைத்து நீங்கள் வடக்கு முகமாக விளக்கை நோக்கி அமரவும்.

பின்னர் ஓம் ஸ்ரீ வாமேச ரிஷியே நமஹ என ஒரு தடவை சொல்லிப் பின்னர் தினமும் கீழ்க்கண்ட மந்திரத்தைத் தினமும் குறைந்தது 108 தடவை அல்லது அதற்கும் அதிகமாக ஜெபித்து வரவும். இந்தப் பிரயோகத்தை தொடங்கும் முதல் நாள் அன்றும், பௌர்ணமி அன்றும் கற்கண்டுப் பாயசம் அல்லது பால்பாயசம் நைவேத்தியம் செய்யவும். பௌர்ணமி அன்று மட்டும் நிலவைப் பார்த்தபடியே மந்திரம் ஜெபிக்க நிறைந்த செல்வத்தைத் தரும். படைத்த நைவேத்யத்தை முதலில் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம் அல்லது மந்திரம் ஜெபம் செய்தவர் சாப்பிடலாம். அதன் பிறகே மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

Advertisement

மந்திரம் :-

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மஹாலக்ஷ்மி மஹாலக்ஷ்மி | ஏஹியேஹி ஏஹியேஹி சர்வ சௌபாக்யம் மே தேஹி ஸ்வாஹா

உத்தரவாதமான பலனைத்தரும் இந்தப் பூஜையைச் செய்து எல்லா வளமும், கூடிய நல்வாழ்வு வாழ ஸ்ரீ மஹாலக்ஷ்மித் தாயாரை வணங்குவோம்.

How do you react to this story?

Share:
Advertisement
Daily Tamilnadu on Google News

கூகுள் செய்திகளில் எங்களை முதன்மை தளமாகச் சேர்ப்பதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெறலாம்.

Add as Preferred Source

0 Comments

Leave a Reply

HgWJsj

Advertisement
Advertisement