ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (31-08-2025)

மேஷம்

குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். புது நட்பு மலரும். நீண்ட நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் இன்று முடியும் வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மனசாட்சி படி செயல்படும் நாள்.

ரிஷபம்

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். நேர்மறை சிந்தனைகள் பிறக்கும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

மிதுனம்

வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக் கழிக்கப்படுவீர்கள். பதறாமல் பக்குவமாகச் செயல்பட வேண்டிய நாள்.

கடகம்

கொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும் . அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

சிம்மம்

விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர் நண்பர்கள் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். தடைகளைத் தாண்டி முன்னேறும் நாள்.

கன்னி

திட்டமிட்ட வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலை அமையும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

துலாம்

குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.

விருச்சிகம்

தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். சகோதரர் வகையில் ஒற்றுமை பிறக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும் . நல்லன நடக்கும் நாள்.

தனுசு

கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். புண்ணியஸ்தலங்கள் சென்று வருவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் அமைதி நிலவும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

மகரம்

உங்களின் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கல்யாணப் பேச்சுவார்த்தை சிலருக்கு சாதகமாக முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

கும்பம்

நட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். புது வேலை கிடைக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். தாயாருக்கு கை, கால் வலி வந்து போகும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். நன்மை கிட்டும் நாள்.

மீனம்

கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தொட்டது துலங்கும் நாள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Back to top button
error: