
மேஷம்
வாழ்க்கைத் துணையால் செலவுகள் ஏற்படும். அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். நேரத்துக்குச் சாப்பிட முடியாதபடி ஒன்று மாற்றி ஒன்று ஏதேனும் வேலை இருந்த படியிருக்கும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. தந்தையுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும். வியாபாரம் வழக்கம் போல் இருக்கும்.
ரிஷபம்
முன் கோபத்தை குறையுங்கள். தனிப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை ஓரளவு குறையும் . திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.
மிதுனம்
குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். உறவினர், நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் விவாதம் வேண்டாம். உத்யோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
கடகம்
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.
சிம்மம்
கணவன்-மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். உறவினர்களால் சங்கடங்கள் வரும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு லேசாக தலை வலிக்கும். கண் சம்மந்தமான பிரச்சனைகளில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சனைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் முக்கிய பொறுப்புகள் அதிகரிக்கும். தடைகளைத் தாண்டி முன்னேறும் நாள்.
கன்னி
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். பரிசு பாராட்டு கிடைக்கும் நாள்.
துலாம்
கொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டு இருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.
விருச்சிகம்
குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். புது நட்பு மலரும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மனசாட்சிப்படி செயல்படும் நாள்.
தனுசு
சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். பொறுமைத் தேவைப்படும் நாள்.
மகரம்
பழைய பிரச்சனைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். எதிர்பாராத செலவுகள் வந்தாலும் எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வந்து சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் மனத் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.
கும்பம்
கம்பீரமாகப் பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அரசியல் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தைரியமுடன் செயல்படும் நாள்.
மீனம்
கணவன்-மனைவிக்குள் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியின் மதிப்பு உண்டாகும். மகிழ்ச்சி ஏற்படும் நாள்.