×

இன்றைய ராசிபலன் (10-04-2025)

Link copied to clipboard!

இன்றைய நாள் (10-04-2025)

குரோதி-பங்குனி 27-வியாழன்-வளர்பிறை

Advertisement

நல்ல நேரம்

காலை 10:30 – 11:30

மாலை –

Advertisement

கௌரி நல்ல நேரம்

காலை 12:30 – 1:30

மாலை 6:30 – 7:30

Advertisement

நட்சத்திரம்

பூரம் பகல் 2.06 வரை பின்பு உத்திரம்.

திதி

Advertisement

திரியோதசி பின்இரவு 2.33 வரை பின்பு சதுர்த்தசி.

யோகம்

இன்று காலை 06.05 வரை அமிர்தயோகம் பின்பு பிற்பகல் 02.06 வரை சித்தயோகம் பின்பு மரணயோகம்

சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)

Advertisement

திருவோணம், அவிட்டம்

இன்றைய ராசிபலன் :-

மேஷம் :

இன்று எல்லா வகையிலும் நன்மை உண்டாக்கும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்து மதிப்பு கிடைக்க பெறுவீர்கள். உடல் உழைப்பை அதிகரிக்க செய்யும். குறிக்கோளற்ற பயணங்கள் உண்டாகும். விழிப்புடன் இருப்பது நல்லது.

ரிஷபம் :

இன்று சுப செலவுகள் உண்டாகும். கையிருப்பு கரையும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் போட்டிகளை சந்திக்க வேண்டி இருக் கும். பார்ட்னர்களுடன் சுமூகமாக செல்வது நல்லது. பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும்.

மிதுனம் :

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்யவேண்டி இருக்கும். வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு செல்லலாமா என்று கூட தோன்றலாம். மனம் தளராமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி குறையலாம்.

கடகம் :

இன்று கணவன், மனைவிக்கிடையே திடீர் மனஸ்தாபம் ஏற்படலாம். பிள்ளைகள் கல்விக்கான செலவு அதிகரிக்கும். அத்துடன் தேவையானவற்றையும் வாங்கி தருவீர்கள். அடுத்தவர்கள் பொறுப்புகளை ஏற்காமல் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் வரலாம்.

சிம்மம் :

இன்று வீண் விவகாரங்களை விட்டு விலகுவது நல்லது. எல்லா பிரச்சனைகளும் தீரும். மன மகிழ்ச்சி உண்டாகும். காரிய அனுகூலங்களை தரும். மனோதிடம் அதிகரிக்கும். பயன்தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். செல்வம் சேரும். வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

கன்னி :

இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். லாபம் அதிகாரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு உண்டாகும். வேலைப் பளு குறையும்.

துலாம் :

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளின் செயல்கள் சந்தோஷத்தை தரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி திருப்தியடைவீர்கள்.

விருச்சிகம் :

இன்று மனதில் துணிச்சல் அதிகரிக்கும். திட்டமிட்டபடி செயலாற்றி காரிய அனுகூலம் பெறுவீர்கள். மன நிம்மதி உண்டாகும். விட்டுக்கொடுத்து வாழ்வதன் மூலம் சிறப்பான பலன்களை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

தனுசு :

இன்று பூமி, வீடு தொடர்பான பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். சகோதரர்களுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கோபம், படபடப்பு குறையும். எதிர்பாராத செலவு உண்டாகலாம். அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்படும். தாயின் உடல்நிலையில் கவனம் தேவை.

மகரம் :

இன்று தொழில் வியாபாரத்தில் திடீர் சிக்கல் ஏற்பட்டு சரியாகும். பணவரத்து தடைபட்டாலும் வந்துசேரும். வியாபார பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கும் போது கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் அலுவலக பொறுப்புகளை கவனமாக செய்வது நல்லது.

கும்பம் :

இன்று இயந்திரங்களில் பணி புரிபவர்கள் ஆயுதங்களை கையாள்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது செயல்படுவது அவசியம். குடும்பத்தில் இருப்பவர்களது பேச்சுக்கு எதிர்த்து பேசுவதை தவிர்ப்பது நன்மை தரும். கணவன், மனைவிக் கிடையே வீண்வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகளிடம் அன்பாக பழகுவது நல்லது.

மீனம் :

இன்று கோபம், படபடப்பு குறையும். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். திடீர் செலவு உண்டாகலாம். மேலிடத்தில் உள்ளவர்களுக்கு திடீர் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வாகனங்கள் மூலம் செலவு உண்டாகும்.

Posted in: ஜோதிடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Related Posts

rasi palan

இன்றைய ராசிபலன் (10-11-2025)

மேஷம் எதையும் தாங்கும் மனோ பலனும் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள்….

Link copied to clipboard!
rasi palan

இன்றைய ராசிபலன் (07-11-2025)

மேஷம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். வியாபாரத்தில்…

Link copied to clipboard!
rasi palan

இன்றைய ராசிபலன் (06-11-2025)

மேஷம் குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். தோற்றப் பொலிவு கூடும். விலை உயர்ந்த பொருட்கள்…

Link copied to clipboard!
rasi palan

இன்றைய ராசிபலன் (05-11-2025)

மேஷம் சிக்கலான சவாலான வேலைகளை எல்லாம் கையில் எடுத்துக் கொள்ளாதீர்கள். அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக்…

Link copied to clipboard!
error: