இன்றைய ராசிபலன் (29-05-2026)

By Web Admin |
Advertisement

மேஷம்

சமயோசிதமாகவும் சாதுரியமாகவும் பேசிசாதிப்பீர்கள். பிள்ளைகளால் உறவினர் நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம்வரும். வியாபாரத்தில் புதுத்தொழில் தொடங்கும் முயற்சி வெற்றிஅடையும். உத்தியோகத்தில் சகஊழியர்கள் பாராட்டுவார்கள். புகழ் கௌரவம் கிடைக்கும் நாள்.

ரிஷபம்

Advertisement

தன்னம்பிக்கையுடன் பொதுகாரியங்களில் ஈடுபடுவீர்கள். சகோதரர் வகையில் ஒற்றுமை பிறக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாயார் ஆதரித்து பேசுவார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். நல்லன நடக்கும் நாள்.

மிதுனம்

திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள். திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். வாகனத்தில் கவனம் தேவை . வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் வரும். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

கடகம்

Advertisement

குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று கொள்வார்கள். சொத்து சம்பந்தமான பிரச்னைக்கு நல்லதீர்வு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பும் லாபம் கிடைக்கும். வேற்று மதத்தவர்கள் நண்பர்களாவார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் சகஊழியர்கள் பாராட்டுவார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

சிம்மம்

கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். திடீர் பணவரவு உண்டு. விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். புதுமுடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். இனிமையான நாள்.

கன்னி

குடும்பத்திலிருந்த பிரச்னைகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தொழிலில் லாபம் வரும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய மாற்றங்கள் ஏற்படும் நாள்.

துலாம்

உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். சகோதரவகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்த மின்னணு மின்சார பொருட்கள் வாங்குவீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். தாய் வழியில் ஆதரவுப் பெருகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

விருச்சிகம்

சிலரின் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தாரை குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். கவனம் தேவைப்படும் நாள்.

தனுசு

புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். அனாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கனவு நனவாகும் நாள்.

மகரம்

சொந்த பந்தங்கள் சிலர் கேட்ட உதவியை செய்வார்கள்.சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். சாதிக்கும் நாள்.

கும்பம்

வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். கவனம் தேவைப்படும் நாள்.

மீனம்

இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

Tags: #இன்றைய ராசிபலன்
Advertisement

Your reaction to this article:

Share:
Daily Tamilnadu on Google News

Get the latest news by adding us as a preferred source on Google News.

Add as Preferred Source
Advertisement