இன்றைய ராசிபலன் (21-10-2025)
மேஷம்
உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். தன்னம்பிக்கை குறையும். உறவினர்கள் நண்பர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சில சூட்சமங்களை கற்றுக் கொள்வீர்கள். தடைகள் ஏற்படும் நாள்.
ரிஷபம்
மறைமுக விமர்சனங்களும் எதிர்ப்புகளும் வந்து நீங்கும். அக்கம் பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கோப்புகளைக் கவனமாகக் கையாளுங்கள். உங்கள் பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப் படலாம். மொத்தத்தில், இன்று அதிக அளவில் பொறுமைத் தேவைப்படும் நாள்.
மிதுனம்
அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். தடைகளைத் தாண்டி முன்னேறும் நாள்.
கடகம்
இன்றைக்கு புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடவும். வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். மாலையில் உறவினர்கள், நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத்துணைவழி உறவுகள் உதவி கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும்.
சிம்மம்
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளால் உறவினர் நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். நினைத்த காரியம் நிறைவேறும் நாள்.
கன்னி
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.
துலாம்
துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். மனைவி வழி உறவினர்களால் மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். தைரியம் கூடும் நாள்.
விருச்சிகம்
உங்கள் வேலைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வீர்கள். துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியமுடன் செயல்படும் நாள்.
தனுசு
குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். மற்றவர்களின் மன நிலையை உணர்ந்து பேசும் பக்குவம் உண்டாகும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். நன்மை நடக்கும் நாள்.
மகரம்
கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். தாயாரின் உடல் நிலை சீராகும். புது நட்பு மலரும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.
கும்பம்
புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். நினைத்தது நிறைவேறும் நாள்.
மீனம்
குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வந்து சேரும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உறவினர் நண்பர்களிடையே மதிப்பு உயரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். மகிழ்ச்சி ஏற்படும் நாள்.
Posted in: ஜோதிடம்