இன்றைய ராசிபலன் (20-10-2025)
மேஷம்
கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். பணம் நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். பயணங்களில் கவனம் தேவை. வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படாமல் கவனமாக இருக்கவும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து போகும். போராடி வெற்றி பெற வேண்டிய நாள்.
ரிஷபம்
மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை தெரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.
மிதுனம்
இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். நம்பிக்கைக்குரியவர்கள் உதவுவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். புதிய பாதை தெரியும் நாள்.
கடகம்
புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். சிலருக்குக் குடும்ப விஷயமாக சற்று அலைச்சலும் செலவுகளும் ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிற்பகலுக்குமேல் நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். சகோதர வகையில் நன்மை ஏற்படும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் மறைமுகத் தொல்லைகள் ஏற்படும்.
சிம்மம்
உங்கள் வேலைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வீர்கள். துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். தைரியமுடன் செயல்படும் நாள்.
கன்னி
சொந்த பந்தங்கள் சிலர் கேட்ட உதவியை செய்வார்கள்.சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும் . வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். சாதிக்கும் நாள்.
துலாம்
சமயோசிதமாக சாதுரியமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள்.உறவினர்கள் நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். அதிகாரப் பதவி பொறுப்பு கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். அமோகமான நாள்.
விருச்சிகம்
கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.
தனுசு
சமயோசிதமாகவும், சாதுரியமாகவும் பேசி சாதிப்பீர்கள். பிள்ளைகளால் உறவினர் நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் சிலருக்கு வரும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். புகழ் கௌரவம் கிடைக்கும் நாள்.
மகரம்
வேலைச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.
கும்பம்
வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். கவனமுடன் இருக்க வேண்டிய நாள்.
மீனம்
எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவு கிட்டும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். நாடிவந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.
Posted in: ஜோதிடம்