இன்றைய ராசிபலன் (17-10-2025)
மேஷம்
பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். அமோகமான நாள்.
ரிஷபம்
குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். புகழ் கௌரவம் கூடும் நாள்.
மிதுனம்
தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வீட்டை அழகுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். தைரியமான முடிவு எடுக்கும் நாள்.
கடகம்
எதிர்பாராத சந்திப்பு நிகழும். வாகன வசதி பெருகும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். சாதிக்கும் நாள்.
சிம்மம்
உங்கள் செயலில் வேகம்கூடும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
கன்னி
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். மகிழ்ச்சியான நாள்.
துலாம்
மறைமுக விமர்சனங்களும் எதிர்ப்புகளும் வந்து போனாலுமே, அதனை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். எனினும், வீட்டிலும் வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரம் வழக்கம் போலவே இருக்கும்.
விருச்சிகம்
எதிலும் வெற்றி பெறுவீர்கள். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.
தனுசு
சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். சிந்தனையுடன் செயல்பட்டு வெற்றி பெறும் நாள்.
மகரம்
திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். புண்ணியஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சாதிக்கும் நாள்.
கும்பம்
குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் அன்புத்தொல்லை குறையும். வியாபாரத்தில் புதுவேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவு நனவாகும் நாள்.
மீனம்
குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். உறவினர், நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் விவாதம் வேண்டாம். உத்யோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
Posted in: ஜோதிடம்