
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் கிழக்குப் பகுதியை உலுக்கிய இந்த இயற்கை பேரழிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,200ஐ தாண்டியுள்ளது. மேலும் 4,000 பேர் படுகாயமடைந்தனர்.
பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள குனார் மாகாணத்தில் நிலநடுக்கத்தின் தீவிரம் அதிகமாக இருந்தது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், மலைப்பாங்கான நிலப்பரப்பு காரணமாக நிவாரணக் குழுக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றன.
தாலிபான் அரசாங்க வட்டாரங்களின் தகவல்களின்படி, இதுவரை 2,217 பேர் உயிரிழந்துள்ளனர், சுமார் 4,000 பேர் நிலநடுக்கத்தில் காயமடைந்துள்ளனர் என்று அரசாங்க துணை செய்தித் தொடர்பாளர் ஹண்டுல்லா ஃபித்ரத் ‘எக்ஸ்’ மூலம் தெரிவித்தார். மீட்புப் பணிகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் கூறினார். இந்த நிலநடுக்கத்தின் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.