தமிழ்நாடு

இன்றைய (09-03-2024) தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

சென்னையில் இன்று (மார்ச் 09) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.49,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 5 நாட்களாகவே தங்கம் விலை தொடர் ஏற்றத்தில் இருந்து வருகிறது. இதன்படி கடந்த 5 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்துள்ளது.

நேற்று 22 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ.48,840க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.49,200க்கும், ஒரு கிராம் தங்கம் விலை ரூ.45 உயர்ந்து ரூ.6,150க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 24 காரட் தூய தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.53,680க்கும், ஒரு கிராம் தங்கம் விலை ரூ.50 உயர்ந்து ரூ.6,710க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை 20 காசுகள் உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.79.20க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.79,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + three =

Back to top button
error: