தமிழ்நாடு

முகூர்த்த தினத்தையொட்டி பூக்களின் விலை கடும் உயர்வு

தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களுமே அதிக கனமழை மற்றும் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட நிலையில் விளைச்சல் கடுமையாக சரிவடைந்து பூக்களின் விலை உயர்வடைந்துள்ளது.

அந்த வகையில், தை மாதம் முதல் முகூர்த்த நாட்கள் தொடர்ந்து வரும் நிலையில் மல்லிப்பூ, பிச்சிப்பூ, ரோஜா, முல்லை, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

அதாவது, மல்லிப்பூ கிலோ ரூ. 6000-க்கும், பிச்சிப்பூ கிலோ ரூ.2500 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முகூர்த்த தினத்தை ஒட்டி பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும், இந்த தை மாதம் முழுவதும் அதிகளவில் முகூர்த்த தினம் இருக்கும் என்பதனால் இந்த மாதம் முழுவதும் பூக்களின் விலை தொடர்ந்து உயரவே செய்யும் எனவே வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventy three − = sixty six

Back to top button
error: