நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை (ஜூன் 14) விடுமுறை..!

By Web Admin |
Advertisement

நீலகிரி மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் மலைப்பகுதிகளிலும், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த சூழ்நிலையில், நீலகிரி மாவட்டத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட்டைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை (ஜூன் 14) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மீறும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நந்தகுமார் எச்சரித்துள்ளார்.

Advertisement
Advertisement

Your reaction to this article:

Share:
Daily Tamilnadu on Google News

Get the latest news by adding us as a preferred source on Google News.

Add as Preferred Source
Advertisement