தமிழ்நாடு

ரூ.48 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை..!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

இன்றைய (மார்ச் 07) நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.50 உயர்ந்து ரூ.6,090க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.400 உயர்ந்து ரூ.48,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல 24 கேரட் சுத்தமான தங்கம் விலை ஒரு கிராம் ரூ.6,560க்கும், ஒரு சவரன் ரூ. 52,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலையை போலவே வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. அதன் படி ஒரு கிராம் வெள்ளி ரூ.78.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− one = one

Back to top button
error: