தமிழ்நாடு

ரூ.49 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை..!

சென்னையில் இன்று (மார்ச் 08) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது.

கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏறுமுகமாக உள்ளது. இதன்படி தங்கம் விலை தொடர்ந்து 4வது நாளாக இன்றும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

அந்த வகையில் 22 கார்ட் தங்கம் விலை சவரனுக்கு ரூ.49 ஆயிரத்தை நெருங்க உள்ளது. தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.48,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.15 அதிகரித்து ரூ.6,105க்கு விற்பனை செய்யப்படுகிறது.

gold rate

அதேபோல் 24 காரட் தூய தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 அதிகரித்து ரூ.53,280க்கும், ஒரு கிராம் தங்கம் விலை ரூ.16 அதிகரித்து ரூ.6,660க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை உயர்ந்திருக்கும் நிலையில் வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 50 பைசா அதிகரித்து, ஒரு கிராம் ரூ.78.50-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.500 அதிகரித்து, ரூ.78,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ fifty eight = sixty one

Back to top button
error: