கவனத்திற்கு! இன்று இந்த மாவட்டங்களில் மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்துறை அறிவிப்பு!

By Web Admin |
Advertisement

தமிழகத்தின் மின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, கோவை, திருப்பூர், சேலம் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களின் முக்கிய பகுதிகளில் இன்று (டிசம்பர் 24) காலை முதல் மாலை வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

அதன்படி, கோவை மாவட்டத்தின் கரையாம்பாளையம் பகுதிகள் மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகள். அதேபோல், சேலம் மாவட்டத்தின் தோப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள், விழுப்புரம் மாவட்டத்தின் தாயனூர் சுற்றுப்புறப் பகுதிகளிலும் இன்று முழு நேர மின்தடை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மின் பராமரிப்பு பணிகள் பொதுவாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்பதால், பொதுமக்கள் தங்கள் அன்றாடத் தேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுமாறு மின்சார வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement
Advertisement

Your reaction to this article:

Share:
Daily Tamilnadu on Google News

Get the latest news by adding us as a preferred source on Google News.

Add as Preferred Source
Advertisement