விளம்பரம்

ஜிஎஸ்டி வசூலில் புதிய சாதனை.. ஏப்ரல் மாதத்தில் ரூ.2.37 லட்சம் கோடி வசூல்..!

இந்தியாவில் ஜிஎஸ்டி வசூலில் இதுவரை இல்லாத அளவுக்கு சாதனை படைத்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் சாதனை அளவிலான ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது.

சரக்கு மற்றும் சேவை வரி கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூ. 2.37 லட்சம் கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. இருப்பினும், கடந்த 2024 ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த வசூல் 12.6 சதவீதம் அதிகரித்துள்ளது தெரியவந்தது.

ஜூலை 1, 2017 அன்று ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இதுவரை இல்லாத அளவு சாதனையாகும். இருப்பினும், உள்நாட்டு பரிவர்த்தனைகளில் அதிகரிப்பு, இறக்குமதிகள் மீதான வரி உயர்வு, பொருளாதார வளர்ச்சி, மேம்பட்ட வரி வசூல் திறன் மற்றும் கடுமையான வரி ஏய்ப்பு எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக இந்த வசூல்கள் ஏற்பட்டதாக நிதி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பகிர்வு:

0 கருத்துக்கள்

கருத்து தெரிவிக்க

Are you human? Please solve:Captcha


அறிவிப்புகள் 0
விளம்பரம்
விளம்பரம்
error: