Skip to content
Daily Tamilnadu
செவ்வாய், 25 ஆகஸ்ட் 2026
BREAKING
தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! வருமான வரிக் கணக்குத் தாக்கல்: ஜூலை 31 காலக்கெடு – தவறினால் ரூ.5,000 வரை அபராதம்! தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! வருமான வரிக் கணக்குத் தாக்கல்: ஜூலை 31 காலக்கெடு – தவறினால் ரூ.5,000 வரை அபராதம்!
Advertisement

ஆகஸ்ட் மாதத்தில் நிகழவுள்ள முக்கிய நிதி மாற்றங்கள்..!

வழக்கமாக, நிதி மாற்றங்கள் ஒவ்வொரு மாதமும் நடக்கும். இந்த ஆகஸ்ட் மாதத்திலும், நமது அன்றாட வாழ்வில் சில முக்கிய மாற்றங்கள் நிகழும். இவை நமது அன்றாட பரிவர்த்தனைகள், பயணம் மற்றும் கிரெடிட் கார்டு சலுகைகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். புதிய FASTag வருடாந்திர பாஸ் டோல் பிளாசாக்கள் தொடர்பான குறிப்பிடத்தக்க மாற்றம் இந்த மாதமே தொடங்கும்.

FASTag வருடாந்திர பாஸ்

ஆகஸ்ட் 15 முதல் தனியார் வாகனங்களுக்கு ஒ‌ருமுறை கட்டணம் செலுத்தும் வசதியை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் தொடங்கவுள்ளது. இந்த பாஸ் ஆண்டுக்கு ரூ. 3,000 கட்டணத்தில் 200 பயணங்களுக்கு செல்லுபடியாகும். இது சுங்கச்சாவடிகளில் கட்டணங்களை எளிதாக்கும் மற்றும் நெரிசலைக் குறைக்கும். இருப்பினும், வருடாந்திர சுங்கச்சாவடி கட்டாயமில்லை, வழக்கம் போல் பிளாசாக்களில் பணம் செலுத்தி நீங்கள் பயணிக்கலாம்.

UPI மாற்றங்கள்

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை எளிதாக்குவதற்காக, இந்திய தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (NPCI), ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுகம் (UPI) அமைப்பில் முக்கிய மாற்றங்களை அறிமுகப்படுத்துகிறது. இதன் ஒரு பகுதியாக, பேலன்ஸ் சரிபார்ப்பு ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன. இதேபோல், ஆட்டோ பே பரிவர்த்தனைகளுக்கு குறிப்பிட்ட நேரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் ஆட்டோ பே வசதியைப் பயன்படுத்த முடியாது. இதேபோல், பரிவர்த்தனை நிலை சரிபார்ப்பு ஒரு நாளைக்கு மூன்று முறை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

Advertisement

PNB KYC புதுப்பிப்பு

நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத்துறை கடன் வழங்குநரான பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), தனது வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகள் சீராக செயல்படுவதை உறுதி செய்வதற்காக ஆகஸ்ட் 8 ஆம் தேதிக்குள் தங்கள் வங்கிக் கணக்குகளில் KYC தகவல்களைப் புதுப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இந்த புதுப்பிப்பு ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களின்படி செய்யப்படுகிறது என்று வங்கி தெரிவித்துள்ளது.

எஸ்பிஐ கார்டு விதிமுறைகள்

ஆகஸ்ட் 11 முதல் இணை பிராண்டட் கிரெடிட் கார்டுகளைப் பெறுபவர்களுக்கான விமான விபத்து காப்பீட்டுச் சலுகைகளை நீக்குவதாக SBI கார்டு அறிவித்துள்ளது. இது எலைட், பிரீமியம் மற்றும் பிளாட்டினம் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துபவர்களைப் பாதிக்கும்.

How do you react to this story?

Share:
Advertisement
Daily Tamilnadu on Google News

கூகுள் செய்திகளில் எங்களை முதன்மை தளமாகச் சேர்ப்பதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெறலாம்.

Add as Preferred Source

0 Comments

Leave a Reply

kCW9EH

Advertisement
Advertisement