
பிரதமர் நரேந்திர மோடி, 5 நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், ஜூலை 04-ம் தேதி திரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டுக்கு சென்றடைந்தார். அங்கு, அவருக்கு தி ஆர்டர் ஆஃப் தி டிரினிடாட் அண்டு டொபாகோ குடியரசு என்ற உயரிய விருது வழங்கப்பட்டது.
பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட இந்த விருது, இந்தியாவின் கலாச்சார மற்றும் சமூக பிணைப்புகளை உலகளவில் வலுப்படுத்தும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது.
விருது பெற்ற போது, பிரதமர் மோடி கூறியதாவது: “140 கோடி இந்தியர்களின் சார்பாக இந்த விருதை ஏற்றுக்கொள்கிறேன்” என பெருமிதமாக தெரிவித்தார்.
பிரதமர், திரினிடாட் மற்றும் டொபாகோவில் உள்ள இந்திய வம்சாவளியினரின் கலாச்சார மரபுகளைப் பாராட்டினார்.
இந்த விருது, பிரதமர் மோடியின் அரசியல் சாதனைகள் மற்றும் உலகளாவிய உறவுகளை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய அங்கமாகும்.