×

Betel Leaf: வெற்றிலையின் மருத்துவ குணங்கள்!

Link copied to clipboard!

மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலை பயன்பாட்டில் இருந்து வருகிறது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம். அரை டம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.

வயிற்றுவலி:

Advertisement

இரண்டு தேக்கரண்டியளவு சீரகத்தினை மைபோல் அரைத்து மூன்று தேக்கரண்டி வெண்ணெயில் போட்டு கலக்கி 5 வெற்றிலையை எடுத்து அதன் பின் புறத்தில் இந்தக்கலவையை கனமாக தடவி, மருந்து தடவிய பாகத்தை சட்டியில் படும்படி வைத்து வதக்க வேண்டும். ஒவ்வொரு வெற்றிலையையும் வதக்கிய பின் ஒரு டம்ளர் தண்ணீரை விட்டு நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி அந்த கசாயத்தை ஒரு வேளை மட்டும் சாப்பிட்டால் வயிற்றுவலி நீங்கி விடும்.

தலைவலி:

வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும்.

Advertisement

தேள் விஷம்:

இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.

சர்க்கரை வியாதி:

Advertisement

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு 500 மிலி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு 150 மிலி ஆக குறையும் வரைகொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து வேளைக்கு 50 மிலி வீதம் மூன்று வேளை உணவுக்கு முன்பு சாப்பிடவும்.

அல்சர்:

அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் அத்தி இலை 1 கைப்பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும். முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ்சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்.

Advertisement

Posted in: ஆரோக்கியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Related Posts

badam benefits

ஒரு மாதம் ஊறவைத்த பாதாம் பருப்பை சாப்பிட்டால்.. உங்களுக்குள் ஏற்படும் மாற்றங்கள் இவைதான்!

பச்சையாக பாதாம் பருப்பை சாப்பிடுவதை விட, பாதாம் பருப்பை இரவு முழுவதும் ஊறவைத்து, அதன் உமியை அகற்றுவது நல்லது. இதைச்…

Link copied to clipboard!
sleep

தூக்கமின்மை: தூங்க முடியவில்லையா? இதை முயற்சி செய்து பாருங்கள்!

நாட்டில் சுமார் நாற்பது சதவீத மக்கள் தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தூக்கமின்மை வேறு பல பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்….

Link copied to clipboard!
walnut benefits

மூளைக்கும் இதயத்துக்கும் ஒரு சூப்பர் ஃபுட்: தினமும் 3 வால்நட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

வால்நட்ஸ் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது பொதுவாக அறியப்படுகிறது. இருப்பினும், ஒரு நாளைக்கு மூன்று வால்நட் சாப்பிடுவது மூளை மற்றும் இதய…

Link copied to clipboard!
eye drops

கண் சொட்டு மருந்து போடும்போது தவறுதலாக கூட இந்த தவறுகளைச் செய்யாதீர்கள்!

கண் பிரச்சனைகள் இருக்கும்போது அல்லது மருத்துவரின் ஆலோசனையின்படி நாம் பொதுவாக கண் சொட்டு மருந்துகளைப் பயன்படுத்துகிறோம். இருப்பினும், பலருக்கு இந்த…

Link copied to clipboard!
error: