இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு.. விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்!

By Web Admin |
Advertisement

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 98 தொழில்நுட்ப வல்லுநர் பதவிகளுக்கும், பட்டதாரி மற்றும் டிப்ளமோ பயிற்சியாளர் பதவிகளுக்கும் விண்ணப்பங்களை வரவேற்கிறது.

தொழில்நுட்ப வல்லுநர் பதவிகளில், 20 டிப்ளமோ டெக்னீசியன் (மெக்கானிக்கல்), 26 டிப்ளமோ டெக்னீசியன் (எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன்), 34 ஆபரேட்டர் (ஃபிட்டர்), 3 ஆபரேட்டர் (எலக்ட்ரீஷியன்), 3 ஆபரேட்டர் (மெஷினிஸ்ட்), மற்றும் 1 ஆபரேட்டர் (ஷீட் மெட்டல் வொர்க்கர்) பணியிடங்கள் உள்ளன.

பதவியைப் பொறுத்து, டிப்ளமோ அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் தகுதியுடையவர்கள்.

Advertisement

இந்த பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.45,852 முதல் ரூ.47,868 வரை சம்பளம் வழங்கப்படும். எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகிய செயல்முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்தப் பதவிகளுக்கான விண்ணப்பங்களை இந்த மாதம் 18 ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க:

https://www.hal-india.co.in/career

Advertisement
Advertisement

Your reaction to this article:

Share:
Daily Tamilnadu on Google News

Get the latest news by adding us as a preferred source on Google News.

Add as Preferred Source
Advertisement