இன்றைய ராசிபலன் (19-06-2025)
இன்றைய நாள் (19-06-2025)
விசுவாவசு-ஆனி 5-வியாழன்-தேய்பிறை
நல்ல நேரம்
காலை 10:30 – 11:30
மாலை –
கௌரி நல்ல நேரம்
காலை 12:30 – 1:30
மாலை 6:30 – 7:30
நட்சத்திரம்
உத்திரட்டாதி இரவு 8.41 வரை பின்பு ரேவதி
சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)
மகம், பூரம்
இன்றைய ராசிபலன் :-
மேஷம்
நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும் . பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும் . வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை குறையும். உத்தியோகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.
ரிஷபம்
குடும்பத்துடன் கலந்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள்.
மிதுனம்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டுறிவீர்கள். பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். கனவு நனவாகும் நாள்.
கடகம்
திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சி களை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.
சிம்மம்
உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
கன்னி
மனைவி வழியில் அனுகூலம் உண்டு. புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். விரும்பியபொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.
துலாம்
மற்றவர்களை நம்பி எந்த முடிவும் எடுக்க கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களைக் கண்டறிவீர்கள். அக்கம் பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.
விருச்சிகம்
எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் கவனமாகப் பேசுங்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொறுமை தேவைப்படும் நாள்.
தனுசு
தந்தைவழி உறவுகளால் சங்கடம் ஏற்படக்கூடும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத் துணையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் சிலருக்கு எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டாகும். குடும்பப் பொறுப்புகளை உற்சாகமாக நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு பாராட்டும்படி இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
மகரம்
எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்.
கும்பம்
அனாவசிய செலவுகளை குறைக்கப்பாருங்கள். திடீர் பயணங்கள் இருக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு அடைவீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.
மீனம்
குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்லசெய்தி வரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். உற்சாகமான நாள்.
Posted in: ஜோதிடம்