வீடு கிரகப்பிரவேசம் வைக்க சிறந்த மாதம், நாள், லக்னம் தெரியுமா?

By Web Admin |
Advertisement

புதிய வீடு கட்டி குடியேற சிறந்த மாதங்கள், சிறந்த நாட்கள், லக்னம், ஆகியவற்றை இப்போது பார்க்கலாம்.

பொதுவாக சில மாதங்களில் வீடு கட்டிய குடியேற நம் முன்னோர்கள் தடை விதித்துள்ளனர். அந்த மாதங்களையும் அதற்கான காரணங்களையும் இப்போது பார்க்கலாம்.

புது வீடு கட்டி ஆனி மாதத்தில் குடி போகக்கூடாது. ஏனெனில் இந்த ஆனி மாதத்தில்தான் மகாபலி சக்கரவர்த்தி தனது ராஜ்ஜியம் முழுவதையும் இழந்தார்.

Advertisement

ஆடி மாதத்தில் வீடு குடி போகக்கூடாது. ஏனெனில் இந்த மாதத்தில் இராவணன் தனது கோட்டையை இழந்தார்.

புரட்டாசி மாதத்தில் வீடு குடி போகக்கூடாது. ஏனெனில் இந்த மாதத்தில் தான் இரணியன் தனது அரண்மனையிலேயே நரசிம்ம மூர்த்தியினால் சம்ஹாரம் செய்யப்பட்டார்.

மார்கழி மாதத்தில் வீடு குடி போகக்கூடாது. ஏனெனில் இந்த மாதத்தில் துரியோதனன் தனது ராஜ்ஜியத்தை இழந்தார்.

மாசி மாதத்தில் வீடு குடி போகக்கூடாது. ஏனெனில் இந்த மாதத்தில் தான் சிவபிரான் ஆல கால விஷம் அருந்தி மயக்க முற்றார்.

Advertisement

பங்குனி மாதத்தில் வீடு குடி போகக்கூடாது. ஏனெனில் இந்த மாதம் தான் சிவன் மன்மதனை எரித்த மாதமாகும்.

வீடு கிரகப்பிரவேசம் வைக்க சிறந்த மாதம் எது?

சித்திரை

வைகாசி

ஆவணி

ஐப்பசி

கார்த்திகை

தை

வீடு கிரகப்பிரவேசம் வைக்க சிறந்த நாட்கள் எது?

திங்கட்கிழமை

புதன் கிழமை

வியாழன் கிழமை

வெள்ளிக் கிழமை

வீடு கிரகப்பிரவேசம் வைக்க சிறந்த நட்சத்திரங்கள் எது?

அசுவினி, ரோகினி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், மகம், உத்திராடம், உத்திரட்டாதி, அஸ்வதம், சுவாதி, அனுஷம், மூலம், திருவோணம், அவிட்டம், சதயம், ரேவதி போன்ற நட்சத்திரங்கள் வீடு கிரகப்பிரவேசம் செய்வதற்கு சிறந்தவை.

வீடு கிரகப்பிரவேசம் வைக்க சிறந்த லக்னம் எது?

ரிஷபம்

மிதுனம்

கன்னி

விருச்சிகம்

கும்பம்

Advertisement

Your reaction to this article:

Share:
Daily Tamilnadu on Google News

Get the latest news by adding us as a preferred source on Google News.

Add as Preferred Source
Advertisement