நெய் தீபம் ஏற்றுவதால் உண்டாகும் பலன்கள்!!

By Web Admin |
Advertisement

இறைவனின் அருளை விரைவாக பெறுவதற்கு உதவுவது நாம் ஏற்றும் தீபங்கள்தான். அதுவும் திருக்கோவில்களில் தீபம் ஏற்றுவது மிகச்சக்தி வாய்ந்த பரிகாரம் ஆகும்.

அதிகாலை, நண்பகல், அந்தி பொழுதில் திருக்கோவில்களில் நெய் தீபம் ஏற்றுவது அதிக பலனை கொடுக்கும். இதில் பல சூட்சும ரகசியங்கள் அடங்கி உள்ளன. கோவில்களில் இந்த மூன்று வேளைகளில் ஏற்றப்படும் தீபம் உடனுக்குடன் துன்ப நிவர்த்தியை தரும்.

மிகக் கடுமையான பிரச்சனைகளுக்கு நல்ல சுத்தமான நெய்யை, இறைவனின் கருவறையில் சுடர்விட்டு பிரகாசிக்கும் தூங்கா விளக்கில் ஊற்றி வந்தால் போதும்.

Advertisement

இவ்வாறு நெய் தீபம் ஏற்றுவது உடலில் இருந்து பிரிய போகும் ஒரு ஜீவனின் நேரத்தையே தள்ளிப் போடும் அளவிற்கு சக்தி வாய்ந்தது ஆகும்.

பல ஆயிரம் செலவு செய்து பரிகாரங்கள் பண்ணுவதை விட,திருக்கோவில்களில் ஒரு நெய் தீபம் ஏற்றுவது பலமடங்கு சிறந்தது.

லக்ஷ்மிக்கு உகந்தது நெய் தீபம். நெய் தீபம் ஏற்றி வீட்டில் வழிபட்டால் லட்சுமி நம் இல்லம் தேடி விரைவில் வருவாள்.

குலதெய்வம் நம் வீட்டிற்குவர சுத்தமான நெய் மற்றும் விளக்கெண்ணை கலந்து தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றது.

Advertisement

நெய் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்

குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் ஏற்படும் போதும் உடனடியாக அருகிலுள்ள ஆலயங்களில் நெய் தீபம் ஏற்றி வைப்பது அந்த விநாடியே கஷ்டங்கள் குறைவதற்கு மகரிஷிகள் கூறிய ரகசிய பரிகாரமாகும்.

நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் சகலவித சந்தோஷம் இல்லத்தில் நிலைத்து இருக்கும். கிரகதோஷங்கள் விலகி சுகம் பெறலாம். வருமானம் அதிகரிக்கும்.

சக்கரத்தாழ்வார் சன்னதியில் நெய் தீபம் ஏற்றி தினமும் 12 முறை சுற்றி 48 நாட்கள் வழிபட தொழில்,வழக்கு சாதகமாகும்.21 செவ்வாய்க்கிழமை நெய்தீபம் ஏற்றிவர பில்லி சூன்யம் விலகும்.

இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல உள்ள நாகராஜ சிலைக்கு வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12.00 மணிக்கு ராகு காலத்தில் அபிசேகம் செய்து மஞ்சள் குங்குமம் வைத்து செவ்வரளி பூக்கள் சாற்றி நெய்தீபம் ஏற்றி தம்பதியினர் பெயருக்கு அர்ச்சனை செய்தால் தம்பதியினர் ஒற்றுமையுடன் அன்னியோன்யமாக வாழ்வார்கள்.

பித்ரு தோசம் உள்ளவர்கள் தொடர்ந்து அமாவாசை காலங்களில் நெய்தீபம் ஏற்றி பெருமாளை சேவிக்க பித்ரு தோசம் விலகும்.

வெள்ளிக்கிழமை நவக்கிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில் கற்கண்டு போட்டு நெய் தீபம் எற்றி வழிபட கணவன் மனைவி கருத்துவேறுபாடு நீங்கும்.

வியாழக்கிழமைகளில் ஒரு வேளை உபவாசமும் மாலையில் திருக்கோவிலிலுள்ள தட்சணாமூர்த்திக்கு நெய் தீபமும் தொடர்ந்து ஏற்றிவர விரதம் ஏற்ற 192 நாட்களில் கருத்தரிப்பு ஏற்படும்.

மாதவிடாய் சமயத்தில் இந்த விரதத்தை அனுஷ்டிக்காமல் வேறு யார் மூலமாவது நெய் தீபம் ஏற்றி வர வேண்டும். நம்பிக்கை அவசியம்.

திங்கள் கிழமை காலை 6.00 மணிக்குமேல் 7.00 மணிக்குள் நந்திக்கு ஜோடி அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றி வர குடும்பத்தில் அமைதி பிறக்கும்.

நெய் தீபம் ஏற்றும் போது நினைத்தது கைகூடும். செல்வவிருத்தி உண்டாகும். கோவில்களில் துர்க்கைக்கு ஏற்றும் தீபமானது நம்மை பார்த்து இருக்க வேண்டும்.

பொதுவாக தீபம் வடக்கு திசை நோக்கி இருப்பது நல்ல பலனைத் தரும். வடக்கு திசை நோக்கி தீபம் ஏற்றுவதால் செல்வமும், மங்களமும் வீட்டில் பெருகும்.

Advertisement

Your reaction to this article:

Share:
Daily Tamilnadu on Google News

Get the latest news by adding us as a preferred source on Google News.

Add as Preferred Source
Advertisement