இன்றைய ராசிபலன் (30-03-2026)

By Web Admin |
Advertisement

மேஷம்

வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைப்பது தாமதமாகும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாக இருந்தாலும் வீண் செலவுகளும் ஏற்படும்.

ரிஷபம்

Advertisement

தாயாரின் உடல் நிலையில் மட்டும் கூடுதல் கவனம் தேவை. வீடு, வாகனம் தொடர்பாக செலவுகள் ஏற்படலாம். திடீர் பயணங்கள் சிலருக்கு ஏற்படலாம். எனினும், குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வேற்றுமதத்தவர்கள் நண்பர்கள் ஆவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.

மிதுனம்

எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சனைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. கவனம் தேவைப்படும் நாள்.

கடகம்

Advertisement

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வாழ்க்கைத்துணை யுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பப் பொறுப்புகளின் காரணமாக அலைச்சல் ஏற்படும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வழக்கமான பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். வியாபாரத்தில் போட்டிகள் குறைந்து விற்பனை அதிகரிப்பது உற்சாகப்படுத்தும். அதே சமயத்தில், செலவுகளும் சற்று அதிகரிக்கும் நாள்.

சிம்மம்

ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்லக் கூடிய கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப் பிருக்கிறது. வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகும். வேலைச்சுமை மிகுந்த நாள்.

கன்னி

முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே முடிப்பது நல்லது. பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். உத்தியோகத்தில் ஈகோ பிரச்சனை வந்து நீங்கும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.

துலாம்

தாயாரின் உடல் நிலையில் மட்டும் கவனம் தேவை. வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். துணிச்சல் அதிகரிக்கும் நாள்.

விருச்சிகம்

செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும்‌. உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.

தனுசு

கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அழகும் இளமையும் கூடும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். ஆடை ஆபரணம் சேரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

மகரம்

தன்னம்பிக்கை குறையும். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள் . பொறுமைத் தேவைப்படும் நாள்.

கும்பம்

தாயாரின் உடல் நிலையில் மட்டும் கவனம் தேவை. வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். துணிச்சல் அதிகரிக்கும் நாள்.

மீனம்

செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும்‌. உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.

Tags: #இன்றைய ராசிபலன்
Advertisement

Your reaction to this article:

Share:
Daily Tamilnadu on Google News

Get the latest news by adding us as a preferred source on Google News.

Add as Preferred Source
Advertisement