இன்றைய ராசிபலன் (25-02-2026)

By Web Admin |
Advertisement

மேஷம்

ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வண்டி, வாகனம் சம்மந்தமாக செலவுகள் அதிகரிக்கலாம். உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத்தூக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக் கழிக்கப்படுவீர்கள். சகிப்புத் தன்மை அதிகம் தேவைப்படும் நாள்.

ரிஷபம்

Advertisement

குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய பிரச்சனைகளைத் தீர்ப்பீர்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.

மிதுனம்

செலவு அதிகரிக்கும் தான். எனினும், திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சலும், ஆதாயமும் ஏற்படும். சிலருக்கு புதுவேலை கிடைக்கும். வாகனப் பராமரிப்புச் செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து ஓரளவு லாபம் ஈட்டுவீர்கள்‌. உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். சில கஷ்டங்களுக்கு உங்களது அவசர முடிவு தான் காரணம் என்பதை உணர்வீர்கள். எதிர்பார்ப்புகள் இறுதியில் பூர்த்தியாகும் நாள்.

கடகம்

Advertisement

வீடு, வாகனம் சம்மந்தமாக செலவுகள் ஏற்படும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றும் வகையில் சற்று அலைச்சல் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்கும். அவரிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும்.

சிம்மம்

உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்‌. உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

கன்னி

சில எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பழைய கடன்கள் குறித்து அவ்வப்போது யோசிப்பீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும் நாள்.

துலாம்

அலைச்சல் இருந்தாலுமே முயற்சிகள் வீண் போகாது. தடைகளைக் கண்டு தளரமாட்டீர்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பற்று வரவு ஓரளவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். போராடி இறுதியில் உழைப்பால் உயரும் நாள்.

விருச்சிகம்

ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளைப் பார்க்க வேண்டி வரும். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்லக் கூடிய கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப் பிருக்கிறது. வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகும். வேலைச்சுமை மிகுந்த நாள்.

தனுசு

காரிய அனுகூலமான நாள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப் பதில் தாமதம் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் வீண் செலவுகளும் ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். வியாபாரத்தில் சக வியாபாரி களால் அனுகூலம் உண்டாகும். விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

மகரம்

அலைச்சல் இருந்தாலுமே சில காரியங்கள் அனுகூலமாக முடியும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவாக இருப்பார். கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போல் இருந்தாலும், பணியாளர்கள் வகையில் செலவுகள் அதிகரிக்கும். திட்டமிட்டு பொறுமையுடன் செயல்பட்டால் வெற்றி உண்டு.

கும்பம்

புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். இளைய சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். தாயாரின் விருப்பத்தை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் எதிர்பார்த்ததைவிட கூடுதலாகக் கிடைக்கும்.

மீனம்

எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். புதுவேலை சிலருக்கு கிடைக்கும். வியாபாரத்தில் பற்று வரவு ஓரளவு உயரும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

Tags: #இன்றைய ராசிபலன்
Advertisement

Your reaction to this article:

Share:
Daily Tamilnadu on Google News

Get the latest news by adding us as a preferred source on Google News.

Add as Preferred Source
Advertisement