இன்றைய ராசிபலன் (24-03-2026)

By Web Admin |
Advertisement

மேஷம்

வேலைச்சுமையால் உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசுங்கள். உத்தியோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.

ரிஷபம்

Advertisement

மகிழ்ச்சியான நாள். மனதில் தைரியம் அதிகரிக்கும். எடுத்த காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தைவழி உறவுகள் கேட்கும் உதவியைச் செய்து தருவீர்கள். முக்கியப் பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களைப் பற்றி அவதூறாகப் பேசிய சக ஊழியர்கள் மனம் வருந்தி மன்னிப்பு கேட்பார்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் மறையும்.

மிதுனம்

சிலர் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப் படுத்த வேண்டாம். விட்டுக் கொடுக்க வேண்டிய நாள்.

கடகம்

Advertisement

கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருங்கள். பிள்ளைகள் வழியில் சின்னச், சின்ன கவலைகள் வந்து போகலாம். வேலைச்சுமையால் சோர்வு அடைய நேரிடலாம். அனாவசிய செலவுகளை குறைக்கப்பாருங்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போங்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.

சிம்மம்

எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் விருப்பங்கள் நிறைவேறும். பழைய கடன் பிரச்சனை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்‌. மதிப்புக் கூடும் நாள்.

கன்னி

குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து போகும். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். தடைகளைத் தாண்டி முன்னேறும் நாள்.

துலாம்

குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். அரசால் ஆதாயம் உண்டு. வேற்றுமதத்தவர் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள்.

விருச்சிகம்

சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். வேலைகளை உடனடியாக முடிக்க வேண்டும் என நினைப்பீர்கள்‌. வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

தனுசு

வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைப்பது தாமதமாகும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாக இருந்தாலும் வீண் செலவுகளும் ஏற்படும்.

மகரம்

உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். பிரயாணங்களில் நிதானம் தேவை. மற்றபடி, தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்துச் சொன்னால் கோவப்படாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். உத்தியோகத்தில் ஈகோ வந்து செல்லும். கவனம் தேவைப்படும் நாள்.

கும்பம்

கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தொட்டது துலங்கும் நாள்.

மீனம்

தோல்வி மனப்பான்மையால் மன இறுக்கம் அதிகரிக்கும். மற்றவர்களுக்காக நியாயம் கேட்கப் போய் பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்தியோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.

Tags: #இன்றைய ராசிபலன்
Advertisement

Your reaction to this article:

Share:
Daily Tamilnadu on Google News

Get the latest news by adding us as a preferred source on Google News.

Add as Preferred Source
Advertisement