இன்றைய ராசிபலன் (22-01-2026)

By Web Admin |
Advertisement

மேஷம்

மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பழைய பிரச்சனைகளைத் தீர்ப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களைக் கண்டறிவீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

ரிஷபம்

Advertisement

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்கள் வகையில் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்க வேண்டி வரும். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வது மகிழ்ச்சி தரும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். வியாபாரம் சுமாராகத் தான் இருக்கும்.

மிதுனம்

ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளை இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டி வரும். உங்களைப் பற்றி தவறாக சிலர் பேசினாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள். வியாபாரத்தில் புது முயற்சிகளைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் மற்றவர்களின் குறைகளை கவனம் செலுத்த வேண்டாம். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

கடகம்

Advertisement

சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். மற்றவர்களுக்காக பரிந்து பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

சிம்மம்

உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்த மின்னணு மின்சார பொருட்கள் வாங்குவீர்கள். வீட்டை அழகுபடுத்துவீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். தாய் வழியில் ஆதரவுப் பெருகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

கன்னி

ஒரு விஷயத்தை நினைத்து அதிகளவில் குழப்பம் அடைவீர்கள். நியாயத்தை பேசப் போய் பெயரைக் கெடுத்துக் கொள்ள நேரிடும். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். கவனம் தேவைப்படும் நாள்.

துலாம்

சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சிலருக்கு சாதகமாக முடியும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

விருச்சிகம்

ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளை இழுத்துப்போட்டு பார்க்க வேண்டி வரும். சிலர் உங்களை பற்றி தவறாகப் பேசினாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள். வியாபாரத்தில் புதுமுயற்சிகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் மற்றவர்களின் குறைகளில் கவனம் செலுத்த வேண்டாம். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

தனுசு

சில வேலைகளை விட்டு கொடுத்து முடிப்பீர்கள். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

மகரம்

சில விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

கும்பம்

திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பழைய கடன் பிரச்சனை கட்டுப்பாட்டிற்குள் வரும். புதுத்தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் முக்கியத்துவம் தருவார்கள். சாதிக்கும் நாள்.

மீனம்

உணவு விஷயத்தில் கவனம் தேவை. செலவுகள் அதிகரித்தே காணப்படும். வேலை பளு அதிகமாகத் தான் இருக்கும். எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள் வந்துபோகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளுக்கு வளைந்து கொடுத்துப் போவது நல்லது. இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

Tags: #இன்றைய ராசிபலன்
Advertisement

Your reaction to this article:

Share:
Daily Tamilnadu on Google News

Get the latest news by adding us as a preferred source on Google News.

Add as Preferred Source
Advertisement