இன்றைய ராசிபலன் (15-02-2026)

By Web Admin |
Advertisement

மேஷம்

காரிய அனுகூலமான நாள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப் பதில் தாமதம் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் வீண் செலவுகளும் ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். வியாபாரத்தில் சக வியாபாரி களால் அனுகூலம் உண்டாகும். விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

ரிஷபம்

Advertisement

கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

மிதுனம்

திடீர் திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். மற்றவர்களை முழுமையாக நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள். பேச்சில் கூட அதிக நிதானம் தேவை. பெரிய தொகையை கையாளும் சமயத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் சின்னச், சின்ன கருத்து வேறுபாடுகள் வந்து போனாலும் ஒற்றுமை குறையாது.

கடகம்

Advertisement

அதிகரிக்கும் செலவுகளால் கையிருப்பு குறையும். கணவன் – மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். வாழ்க்கைத் துணைவழி உறவினர்களால் சில பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் கனிவாக நடந்துகொள்வது அவசியம்.

சிம்மம்

ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளைப் பார்க்க வேண்டி வரும். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்லக் கூடிய கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப் பிருக்கிறது. வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகும். வேலைச்சுமை மிகுந்த நாள்.

கன்னி

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றும் வகையில் சற்று அலைச்சல் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்கும். அவரிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும்.

துலாம்

அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும். சகோதர்களால் சில சங்கடங்களைச் சமாளிக்க வேண்டியிருக்கும். உறவினர்களுடன் பேசும்போது வீண் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.

விருச்சிகம்

மனதில் அவ்வப்போது உற்சாகம் பெருக்கெடுக்கும். சிலருக்கு திடீர் பணவரவுக்கும் எதிர்பாராத செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. உறவினர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். தாய்வழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பக்குவமாகச் சமாளித்து விடுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்களாலும் பங்குதாரர்களாலும் செலவுகள் ஏற்படும்.

தனுசு

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். சாதிக்கும் நாள்.

மகரம்

செலவு அதிகரிக்கும் தான். எனினும், திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சலும், ஆதாயமும் ஏற்படும். சிலருக்கு புதுவேலை கிடைக்கும். வாகனப் பராமரிப்புச் செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து ஓரளவு லாபம் ஈட்டுவீர்கள்‌. உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். சில கஷ்டங்களுக்கு உங்களது அவசர முடிவு தான் காரணம் என்பதை உணர்வீர்கள். எதிர்பார்ப்புகள் இறுதியில் பூர்த்தியாகும் நாள்.

கும்பம்

குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

மீனம்

ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செலவுகள் அதிகரித்தே காணப்படும். எனினும், சமாளித்து விடுவீர்கள். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். ஆனாலும், புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துவிடுவது நல்லது. பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத் துணைவழி உறவினர்களால் திடீர் செலவுகள் ஏற்படும். இளைய சகோதர வகையில் காரியங்கள் அனுகூலமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் படிப்படியாக நீங்கும்.

Tags: #இன்றைய ராசிபலன்
Advertisement

Your reaction to this article:

Share:
Daily Tamilnadu on Google News

Get the latest news by adding us as a preferred source on Google News.

Add as Preferred Source
Advertisement