இன்றைய ராசிபலன் (12-01-2026)

By Web Admin |
Advertisement

மேஷம்

பேச்சில் நிதானமாக இருந்து கொள்ளவும். கொடுக்கல், வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. பிள்ளைகளின் உடல் நிலையில் கூடுதல் கவனம் தேவை. மற்றபடி, குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கியத் தீர்வு காண்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. நெடு நாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். தைரியம் கூடும் நாள்.

Advertisement

ரிஷபம்

Advertisement

பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

மிதுனம்

தாயாரின் உடல் நிலையில் கவனம் தேவை. திடீர் செலவுகள் திக்குமுக்காட வைக்கும். பழைய கசப்பான சம்பவங்கள் நினைவுக்கு வரும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையாமல் பார்த்துக் கொள்ளவும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.

கடகம்

Advertisement

பிள்ளைகள் வழியில் சின்னச், சின்ன மனக்கவலைகள் வந்து போகலாம். கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் சிறு, சிறு பிரச்சனைகள் வந்து போகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.

Advertisement

சிம்மம்

உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சொத்துப் பிரச்சனையில் ஒன்று தீரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். இனிமையான நாள்.

கன்னி

பொருளாதாரம் ஏற்ற – இறக்கமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். உறவினர், நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் விவாதம் வேண்டாம். உத்யோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

துலாம்

பேச்சில் மட்டும் நிதானத்தை கடைபிடியுங்கள். குடும்பத்தில் சின்னச், சின்ன வாக்கு வாதங்கள் வந்து போனாலும் ஒற்றுமை குறையாது. இறுதியில், குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சொந்த பந்தங்கள் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். பிரபலங்களின் நட்பு சிலருக்கு கிடைக்கும். மனதிற்கு இதமான செய்தி சிலருக்கு வரும். வியாபாரம் லாபம் தரும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தைரியம் கூடும் நாள். சோதனைகளையும் கூட முயற்சியால் சாதனை ஆக்குவீர்கள்.

விருச்சிகம்

முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக் காமல் நீங்களே முடிப்பது நல்லது. பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். உத்தியோகத்தில் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.

தனுசு

தாயாரின் உடல் நிலையில் மட்டும் கூடுதல் கவனம் தேவை. வீடு, வாகனம் தொடர்பாக செலவுகள் ஏற்படலாம். திடீர் பயணங்கள் சிலருக்கு ஏற்படலாம். எனினும், குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வேற்றுமதத்தவர்கள் நண்பர்கள் ஆவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.

மகரம்

இன்று பிள்ளைகள் வழியில் சின்னச், சின்ன மனக்கவலைகள் வந்து போகும். உங்களை அறியாமலேயே ஒருவிதத் தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். உறவினர் நண்பர்களால் அன்புத் தொல்லை அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் மறைமுகத் தொந்தரவு வரக்கூடும். சகிப்புத்தன்மை தேவைப்படும் நாள்.

கும்பம்

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களை விட அதிகாரிகளிடம் செல்வாக்கு கூடும்‌. அவ்வப்போது அலைச்சல் இருந்தாலும் கூட உங்கள் முயற்சி வீண் போகாது.

மீனம்

சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னை புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் அளவாகப் பழகுங்கள். இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

Tags: #இன்றைய ராசிபலன்
Advertisement

Your reaction to this article:

Share:
Daily Tamilnadu on Google News

Get the latest news by adding us as a preferred source on Google News.

Add as Preferred Source
Advertisement

Comments

Comments are disabled on the AMP version of this page. Please visit our full site to read and post comments.

View & Post Comments