இன்றைய ராசிபலன் (11-04-2026)

By Web Admin |
Advertisement

மேஷம்

நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை தாமதம் ஏற்படும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

ரிஷபம்

Advertisement

கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வந்து நீங்கும். கவனம் தேவைப்படும் நாள்.

மிதுனம்

எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சனைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. கவனம் தேவைப்படும் நாள்.

கடகம்

Advertisement

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். சிலருக்கு வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் மற்றும் அதிகாரிகளிடம் செல்வாக்கு கூடும்.

சிம்மம்

சிந்தித்துச் செயல்படவேண்டிய நாள். அடிக்கடி மனதில் சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். தாயின் தேவையை நிறைவேற்ற சிறிது அலைய வேண்டியிருக்கும். உடல்நலனில் கவனம் தேவை. வீட்டில் பொறுப்புகள் அதிகரிக்கும் என்பதால் சற்று சோர்வு உண்டாகும். பணியிடத்திலும் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும்.

கன்னி

ஒருவித படபடப்பு வந்து செல்லும். குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்சனைகள் அதிகமாகும் . நீங்கள் எதை பேசினாலும் அதை எல்லோரும் தவறாகப் புரிந்து கொள்வார்கள். தலைச்சுற்றல் முழங்கால் வலி வந்து விலகும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

துலாம்

சில வேலைகளை நீங்களே முடிப்பது நல்லது. அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்துவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் சிறுசிறு அவமானங்கள் வந்து நீங்கும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.

விருச்சிகம்

தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்துச் சொன்னால் கோவப்படாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். உத்தியோகத்தில் ஈகோ வந்து செல்லும். கவனம் தேவைப்படும் நாள்.

தனுசு

எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் போய் முடியும். எதிர்மறை எண்ணங்கள் வந்து செல்லும். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். தடைகளைத் தாண்டி முன்னேறும் நாள்.

மகரம்

இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் வரும்‌. உற்சாகமான நாள்.

கும்பம்

புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் வருங்காலத்திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். கனவு நனவாகும் நாள்.

மீனம்

கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். விவாதங்களை தவிர்க்க வேண்டிய நாள்.

Tags: #இன்றைய ராசிபலன்
Advertisement

Your reaction to this article:

Share:
Daily Tamilnadu on Google News

Get the latest news by adding us as a preferred source on Google News.

Add as Preferred Source
Advertisement