இன்றைய ராசிபலன் (08-04-2026)

By Web Admin |
Advertisement

மேஷம்

சிந்தித்துச் செயல்படவேண்டிய நாள். அடிக்கடி மனதில் சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். தாயின் தேவையை நிறைவேற்ற சிறிது அலையவேண்டியிருக்கும். உடல்நலனில் கவனம் தேவை. வீட்டில் பொறுப்புகள் அதிகரிக்கும் என்பதால் சற்று சோர்வு உண்டாகும். பணியிடத்தி லும் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும்.

ரிஷபம்

Advertisement

கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். சாதிக்கும் நாள்.

மிதுனம்

நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை தாமதம் ஏற்படும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

கடகம்

Advertisement

எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சனைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. கவனம் தேவைப்படும் நாள்.

சிம்மம்

பணவரவு ஓரளவே திருப்தி தரும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. வாழ்க்கைத்துணையால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். மனதில் அடிக்கடி குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களுக்காக செலவு செய்ய நேரிடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உங்கள் பணிகளை நீங்களே செய்வது நல்லது. வியாபாரத்தில் பணியாளர்களுக்காக செலவு செய்ய நேரிடும். லாபம் எதிர்பார்த்தபடி இருக்கும்.

கன்னி

செலவுகள் அதிகரிக்கும். எனினும் சமாளித்து விடுவீர்கள். சிலருக்கு வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். மற்றவர்களை நம்பி எந்த முடிவும் எடுக்க கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அக்கம் பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும். சிலர் கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். மொத்தத்தில் நன்மை, தீமை கலந்து நடக்கும் நாள்.

துலாம்

கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். விவாதங்களை தவிர்க்க வேண்டிய நாள்.

விருச்சிகம்

எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். புது வேலை அமையும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமாக நாள்.

தனுசு

குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வேற்று மதத்தவர் உதவுவார். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகஸ்தர்கள் சில தந்திரங்களை கற்றுக் கொள்வார்கள். இனிமையான நாள்.

மகரம்

உடன் பிறந்தவர்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள்‌. அரசால் ஆதாயம் உண்டு. துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். வெற்றிக்கு வித்திடும் நாள்.

கும்பம்

சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் அளவாகப் பழகுங்கள். இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

மீனம்

தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்துச் சொன்னால் கோவப்படாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். உத்தியோகத்தில் ஈகோ வந்து செல்லும். கவனம் தேவைப்படும் நாள்.

Tags: #இன்றைய ராசிபலன்
Advertisement

Your reaction to this article:

Share:
Daily Tamilnadu on Google News

Get the latest news by adding us as a preferred source on Google News.

Add as Preferred Source
Advertisement