இன்றைய ராசிபலன் (07-04-2026)

By Web Admin |
Advertisement

மேஷம்

அனாவசிய செலவுகளை குறைக்கப்பாருங்கள். திடீர் பயணங்கள் இருக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சகோதரர்களால் பகை வரக்கூடும். வியாபாரத்தில் பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிருப்தி உண்டாகும். கடினமாக உழைக்க வேண்டிய நாள்.

ரிஷபம்

Advertisement

திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிப்பீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். யாரிடமும் உணர்ச்சி வசப்பட்டு பேசாதீர்கள். வழக்கில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்சனைகள் வரக்கூடும். கவனம் தேவைப்படும் நாள்.

மிதுனம்

தன்னம்பிக்கை குறையும். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.

கடகம்

Advertisement

உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீட்டைப் புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். அதன் காரணமாக சில சுபச் செலவுகள் ஏற்படலாம். புது பொருள் சிலருக்கு வந்து சேரும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். திட்டங்கள் நிறைவேறும் நாள்.

சிம்மம்

புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் வருங்காலத்திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். கனவு நனவாகும் நாள்.

கன்னி

கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகக் கிடைக்கும். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

துலாம்

ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளை இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டி வரும். யாரை நம்புவது என்கிற குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகக் கிடைக்கும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிகம்

ஒரு விஷயத்தை நினைத்து அதிக அளவில் குழப்பம் அடைவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். போராடி வெல்லும் நாள்.

தனுசு

இன்று உங்களை அறியாமலேயே ஒருவித தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். உறவினர் நண்பர்களால் அன்புத் தொல்லை அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் மறைமுக தொந்தரவு வரக்கூடும். சகிப்புத்தன்மை தேவைப்படும் நாள்.

மகரம்

உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீட்டைப் புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். அதன் காரணமாக சில சுபச் செலவுகள் ஏற்படலாம். புது பொருள் சிலருக்கு வந்து சேரும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். திட்டங்கள் நிறைவேறும் நாள்.

கும்பம்

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். சிலருக்கு வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் மற்றும் அதிகாரிகளிடம் செல்வாக்கு கூடும்.

மீனம்

மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். வீட்டிலும் வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும்‌‌. உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். கவனம் தேவைப்படும் நாள்.

Tags: #இன்றைய ராசிபலன்
Advertisement

Your reaction to this article:

Share:
Daily Tamilnadu on Google News

Get the latest news by adding us as a preferred source on Google News.

Add as Preferred Source
Advertisement