இன்றைய ராசிபலன் (06-03-2026)

By Web Admin |
Advertisement

மேஷம்

சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். தந்தைவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அரசாங்கக் காரியம் அனுகூலமாக முடியும். செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிட முடியும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போல் இருந்தாலும், வாடிக்கையாளர்களால் சில பிரச்சனைகள் ஏற்படும்.

ரிஷபம்

Advertisement

மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். தாயாரின் உடல் நிலையில் கூடுதல் கவனம் தேவை. மற்றபடி, சிக்கலான சவாலான காரியங்களை எல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டிவரும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வேலைச்சுமை மிகுந்த நாள்.

மிதுனம்

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வாழ்க்கைத்துணை யுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பப் பொறுப்புகளின் காரணமாக அலைச்சல் ஏற்படும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வழக்கமான பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். வியாபாரத்தில் போட்டிகள் குறைந்து விற்பனை அதிகரிப்பது உற்சாகப்படுத்தும். அதே சமயத்தில், செலவுகளும் சற்று அதிகரிக்கும் நாள்.

கடகம்

Advertisement

சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னை புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் அளவாகப் பழகுங்கள். இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

சிம்மம்

தாயாரின் உடல் நிலையில் கூடுதல் கவனம் தேவை. சிலருக்கு வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கலாம். எனினும், புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். போராடி இறுதியில் சாதிக்கும் நாள்.

கன்னி

செலவுகள் அதிகரித்தே காணப்படும். எனினும், சமாளித்து விடுவீர்கள். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். ஆனாலும், புதிய முயற்சி களில் ஈடுபடுவதைத் தவிர்த்துவிடுவது நல்லது. பிற்பகலுக்குமேல் வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் திடீர் செலவுகள் ஏற்படும். இளைய சகோதர வகையில் காரியங்கள் அனுகூலமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.

துலாம்

பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வேற்று மதத்தவர் உதவுவார். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். நன்மை கிட்டும் நாள்.

விருச்சிகம்

திடீர் என்று வீடு, வாகனம் அல்லது பராமரிப்பு சம்மந்தமான செலவுகள் ஏற்படும். பெரும்பாலும் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும்‌. உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். எதிலும் பொறுமைத் தேவைப்படும் நாள்.

தனுசு

புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். வெளியூரில் அமைந்திருக்கும் பிரசித்தி பெற்ற கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படும். தாய்வழி உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியாது. வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.

மகரம்

உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். பிரயாணங்களில் நிதானம் தேவை. மற்றபடி, தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்துச் சொன்னால் கோவப்படாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். உத்தியோகத்தில் ஈகோ வந்து செல்லும். கவனம் தேவைப்படும் நாள்.

கும்பம்

அவ்வப்போது சுபச் செலவுகள் ஏற்படும். இதனால் கையிருப்பு குறையலாம். மற்றபடி, கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். பழைய பிரச்சனைக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். உடல்நலம் சீராகும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். தொழிலில் அல்லது உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

மீனம்

சில நேரங்களில் வெறுப்பாகப் பேசுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

Tags: #இன்றைய ராசிபலன்
Advertisement

Your reaction to this article:

Share:
Daily Tamilnadu on Google News

Get the latest news by adding us as a preferred source on Google News.

Add as Preferred Source
Advertisement