இன்றைய ராசிபலன் (06-02-2026)

By Web Admin |
Advertisement

மேஷம்

பேச்சில் மட்டும் நிதானத்தை கையாளுங்கள். தேவை இல்லாத முன்கோபத்தை விடுங்கள். கொடுக்கல், வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்தும் சமயத்தில் கவனம் தேவை. மாலையில் சிலர் முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். புதுவேலை சிலருக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியம் ஒன்று முடியும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் ஓரளவு பூர்த்தியாகும் நாள்.

ரிஷபம்

Advertisement

தாயாரின் உடல் நிலையில் கூடுதல் கவனம் தேவை. சிலருக்கு புதிய கடன்கள் ஏற்படலாம். கேட்ட இடத்தில் சிலருக்கு உதவிகள் கிடைக்கும். செலவுகள் அதிகரித்தாலுமே எதிர்பாராத பணவரவும் உண்டு. உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். சோதனைகளைக் கடந்து இறுதியில் சாதனை படைப்பீர்கள்.

மிதுனம்

தலைவலி, உஷ்ணம் சார்ந்த பிரச்சனைகள் வந்து போகலாம். தாயாரின் உடல் நிலையில் கவனம் தேவை. வேலைப்பளுவால் நேரத்திற்கு உண்டு, உறங்க முடியாத நிலை காணப்படும். கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம். தடைகளைத் தாண்டி முன்னேறும் நாள்.

கடகம்

Advertisement

கண் சம்மந்தமான பிரச்சனைகளில் அலட்சியம் வேண்டாம். பிறருக்கு வாக்குக் கொடுப்பதை தவிர்க்கவும். பிள்ளைகள் வழியில் கவலைகள் வந்து போகலாம். மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். சிலர் நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். அதனால் நிறைய செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் வேலை அதிகரித்துக் காணப்படும். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லுங்கள்.

சிம்மம்

கணவன் – மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். தோற்றப் பொலிவு கூடும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்வீர்கள். உத்தியோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

கன்னி

உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. மூட்டுகளில் வலி வந்து போகலாம். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் வந்து போகலாம். வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். உதவி கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். சிறுசிறு ஏமாற்றங்கள் வந்து போகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் அலட்சியம் வேண்டாம். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.

துலாம்

பேச்சில் மட்டும் நிதானத்தை கடைபிடியுங்கள். மற்றபடி, குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற் கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். நட்பு வட்டம் சிலருக்கு விரியும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் இருந்த பிரச்சனைகள் விலகும். பிள்ளைகள் வழியில் சின்னச், சின்ன மனக்கவலைகள் வந்து போகலாம். நன்மை, தீமை கலந்து நடக்கும் நாள்.

விருச்சிகம்

செலவுகள் அதிகரித்துக் காணப்படும். எனினும் சமாளித்து விடுவீர்கள். குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கலாம். நட்பால் சிலருக்கு ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் கடும் போட்டிகள் இருக்கும் தான். எனினும் சமாளித்து ஓரளவு வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஓரளவு ஆதரிப்பார்கள். சிலருக்கு புதிய கடன்கள் ஏற்படலாம். சற்று பொறுமை தேவைப்படும் நாள்.

தனுசு

ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளை இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் மறதியால் பிரச்சனை வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள். எனினும், குரு பலம் இருப்பதால் பெரிய தீமைகள் ஏற்படாது. இறுதியில் சோதனைகளை முயன்று சாதனையாக மாற்றுவீர்கள்.

மகரம்

வண்டி, வாகனங்களில் செல்லும் சமயம் நிதானம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர் நண்பர்கள் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். சிலருக்கு வாகனம் பழுதாகும். அதனால் சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் ஓரளவு போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். தடைகளைத் தாண்டி முன்னேறும் நாள்.

கும்பம்

உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் தேவை. வண்டி, வாகனங்களில் செல்லும் சமயம் பொறுமை தேவை. குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பு அதிகரிக்கும். புதிய மாற்றம் ஏற்படும் நாள்.

மீனம்

செலவுகள் அதிகரித்துக் காணப்படும். கணவன், மனைவி இடையே அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டி இருக்கும். அவ்வப்போது தலைவலி, டென்ஷன் வந்து போகலாம். மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். வீட்டிலும் வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும்‌‌. உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். கவனம் தேவைப்படும் நாள்.

Advertisement

Your reaction to this article:

Share:
Daily Tamilnadu on Google News

Get the latest news by adding us as a preferred source on Google News.

Add as Preferred Source
Advertisement