இன்றைய ராசிபலன் (01-03-2026)

By Web Admin |
Advertisement

மேஷம்

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். சாதிக்கும் நாள்.

ரிஷபம்

Advertisement

எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். புதுவேலை சிலருக்கு கிடைக்கும். வியாபாரத்தில் பற்று வரவு ஓரளவு உயரும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

மிதுனம்

திடீர் செலவுகள் கையிருப்பை கரைக்கலாம். கணவன்-மனைவிக்குள் சின்னச், சின்ன கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். உறவினர் நண்பர்களில் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை செய்யும் போது கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் விவாதம் வந்து நீங்கும். தடைகளைத் தாண்டி முன்னேறும் நாள்.

கடகம்

Advertisement

பொருளாதாரம் சற்று ஏற்ற – இறக்கமாக இருந்தாலுமே சமாளித்து விடுவீர்கள். அடுக்கடுக்கான வேலைகளால் அவதிகொள்ளாதீர்கள். வேலைகளை முடிந்த வரையில் திட்டமிட்டுச் செய்யப் பாருங்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை. பெரிய முதலீடுகளை திட்டமிட்டுச் செய்யவும். உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும். பொறுமைத் தேவைப்படும் நாள்.

சிம்மம்

புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும்‌, ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். கனவு நனவாகும் நாள்.

கன்னி

உணர்ச்சி வசப்படாமல் இருங்கள். இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும் . உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்து கொண்டே இருப்பதாக ஆதங்கப் படுவீர்கள். பொறுமையுடன் சற்று கடினமாக உழைக்க வேண்டிய நாள்.

துலாம்

குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய பிரச்சனைகளைத் தீர்ப்பீர்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.

விருச்சிகம்

அதிகரிக்கும் செலவுகளால் கையிருப்பு குறையும். கணவன் – மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். வாழ்க்கைத் துணைவழி உறவினர்களால் சில பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் கனிவாக நடந்துகொள்வது அவசியம்.

தனுசு

குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த இடத்திற்கு சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புகழ்பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். மகிழ்ச்சியான நாள்.

மகரம்

ஒரு விஷயத்தை நினைத்து அதிக அளவில் குழப்பம் அடைவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். போராடி வெல்லும் நாள்.

கும்பம்

ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளைப் பார்க்க வேண்டி வரும். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்லக் கூடிய கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப் பிருக்கிறது. வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகும். வேலைச்சுமை மிகுந்த நாள்.

மீனம்

புதிய முயற்சிகளை மட்டும் தவிர்க்கவும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருக்கவும். எதிர்பாராத வேலைச்சுமையின் காரணமாக சற்று சோர்வு உண்டாகும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.

Tags: #இன்றைய ராசிபலன்
Advertisement

Your reaction to this article:

Share:
Daily Tamilnadu on Google News

Get the latest news by adding us as a preferred source on Google News.

Add as Preferred Source
Advertisement